முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்ல பட்டியலுக்குச்செல்ல எழுத்தின் அளவு - A + முரண் A A வண்ணம் English

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்

விவசாயத்துறை

பாசனப்பகுதி

பாசனப்பகுதி ஹெக்டரில்
பயிர் செய்யப்பட்ட மொத்த பகுதி 198818
மொத்த பாசன பரப்பளவு 63591
நிகர பாசன பகுதி 63591

TOP

நீர்ப்பாசன முறை

நீர்ப்பாசன முறை எண்களில்.
முக்கிய கால்வாய்கள் இல்லை
குளங்கள் 1694
ஆழ்துளை கிணறுகள் 334
கிணறுகள் 7816

TOP

தொழிலாளர்கள் வகை

தொழிலாளர்கள் வகை எண்களில்.
விவசாயிகள் 173767
விவசாயகூலிகள் 124483

TOP

பாசன ஏரி விபரங்கள்

சிறிய நீர்ப்பாசன குளங்கள் பொதுபணித்துறை குளங்கள்
வரிசை எண் வட்டாரம் முன்னாள் ஜமீன் பஞ்சாயத்து வைகை வடிநிலம் குண்டாறு வடிநிலம் மணிமுத்தாறு வடிநிலம் மொத்தம்
1 இராமநாதபுரம் 5 42 34 - - 81
2 திருபுல்லாணி 5 52 22 - - 79
3 மண்டபம் - - 1 - - 1
4 பரமக்குடி 77 12 49 - - 138
5 போகலூர் 49 5 33 - - 87
6 நயினார்கோவில் 47 7 45 - - 99
7 திருவாடனை 83 115 62 - 27 287
8 ராஜசிங்கமங்களம் 68 106 77 -   251
9 கமுதி 45 169 0 38   252
10 முதுகுளத்தூர் 38 104 12 28   182
11 கடலாடி 20 143 - 74   237
மொத்தம் 437 755 335 140 27 1694

TOP

ஆயக்கட்டு பரப்பு விபரங்கள்

நீர்ப்பாசன முறை
வரிசை எண் வட்டாரம் பொதுபணித்துறை குளங்கள் பஞ்சாயத்து குளங்கள் முன்னாள் ஜமீன் குளங்கள் மொத்தம்
1 இராமநாதபுரம் 5180.8 660 102.4 5943.2
2 திருபுல்லாணி 2478.4 784.8 64.8 3328
3 மண்டபம் 38 - - 38
4 பரமக்குடி 5819.6 276.4 1312.8 7408.8
5 போகலூர் 3000.4 66.8 632 3699.2
6 நயினார்கோவில் 4198 133.6 914.4 5246
7 திருவாடனை 5114.8 2049.2 968.8 8132.8
8 ராஜசிங்கமங்களம் 10060 1944 1065.2 13069
9 கமுதி 3676.4 2454.4 468.8> 6599.6
10 முதுகுளத்தூர் 3740.4 1773.2 53240 6046
11 கடலாடி 7025.6 2352 235.6 9613.2
மொத்தம் 50332 12494 6297 69124

TOP

இயல்பான உற்பத்தி மற்றும் முக்கிய பயிர்கள் உற்பத்தி

வரிசை எண் பயிர் பரப்பு ஹெக்டரில் உற்பத்தி/ஹெக்டர் கிலோவில். மொத்த உற்பத்தி மெட்ரிக் டன்னில்
1 நெல் 121742 3621 440827
2 சோளம் 2629 1975 5192
3 கம்பு 915 3445 3152
4 கேழ்வரகு 369 3040 1121
5 சிறு தானியங்கள் 1643 1610 2645
6 Total millets 6271 3114 19527
7 பருப்பு வகைகள் 3517 450 1853
8 பருத்தி 1915 1.53(பொதி) 4980
9 நிலக்கடலை 3533 2255 7966
10 சூரியகாந்தி பூ 90 1400 126
11 எள் 1301 361 469
12 மிளகாய் 19238 639 12293
13 மல்லி 1488 1618 2407
14 தேங்காய் 8207 9229 757 லட்சம் பருப்பு
15 கரும்பு 456 107 48792
16 சோளம் 715 5500 3932

TOP

இரசாயன உரங்கள் மற்றும் புச்சிகொல்லி பயன்பாடு

மாவட்டம் யூரியா(டன்) டிஏபி(டன்) பொட்டாஷ்(டன்) காம்ப்ளெக்ஸ்(டன்) பூச்சிக்கொல்லிகள்- தூசி(டன்) திரவம்(லிட்டர்)
இராமநாதபுரம் 6947 3160 583 3714 30.537 32341.68

TOP

விவசாய நிலம் பயன்பாட்டுப் பகிர்வு

நில அளவு சதவிகிதம் (%) பரப்பு ஹெக்டரில்
<1 ஹெக்டர் 82% 323856
1-2 ஹெக்டர் 11% 44610
2-4 ஹெக்டர் 5.60% 19620
4-10 ஹெக்டர் 1.30% 5229
> 10 ஹெக்டர் 0.10% 573
மொத்தம் 100% 393888

TOP

இராமநாதபுரத்தில் பயிர் செய்யும் முறைகள்

நெல்
இராமநாதபுரத்தில், நெல் ஒரு பிரதான உணவு பயிராக 63% மேற்பட்ட பகுதிகளில் விதைக்கபடுகிறது. பாசன மற்றும் மானவாரியாக சாகுபடி செய்யபடுகிறது. மானாவாரி விதைப்பு பருவம் பொதுவாக ஆகஸ்டில் தொடங்கி அக்டோபர் இறுதி வரை செய்யபடுகிறது. விவசாயிகள் நடுத்தர மற்றும் நீண்டகால நெல் ரகங்களை பொதுவாக பயன்படுத்துவார்கள், பருவமழை தாமதமாகும் பொழுது விதைப்பு கூட தாமதம் ஆகும், அதுமாதிரி சமயங்களில் குறுகிய மற்றும் நடுத்தர ரகங்களை பொதுவாக பயன்படுத்துவார்கள். தமது தேவைகேற்ப 10 உள்ளூர் ரக நெல் வகைகளோடு, 105 முதல் 130 நாட்கள் கால வரையிலான உயர் விளைச்சல் தரும் நெற்பயிர்களை விதைவிப்பர்கள். மானாவாரி பகுதிகளில் நெல்லுடன் துவரம்பருப்பு ஒரு கலப்பு பயிராக குறிப்பிட்ட அளவிற்கு விளைவிக்கபடுகிறது. ஏரிப் பாசனப் பகுதிகளில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை விதைக்கப்படுகிறது, சிலநேரங்களில் பருவமழை மற்றும் வைகை நதிநிரைப் பொருத்து டிசம்பர் மாதம் வரை விதைக்கப்படுகிறது.சோளம்
வறண்ட நிலங்களில் மானவாரி விதைப்பாக ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் விதைக்கபடுகிறது. செப்டம்பர்க்கு பின் மாற்று பயிராக கம்பு விதைக்கபடுகிறது, சில இடங்களில் மாற்று பயிராக அவரை பயிர் செய்யபடுகிறது.கம்பு
வறண்ட நிலங்களில் மானவாரி விதைப்பாக கம்பு, பொதுவாக செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் விதைக்கபடுகிறது. இராமநாதபுரம் தாலுக்காவில் மட்டும் டிசம்பர் மாதம் வரை விதைக்கபடுகிறது. விளைவிக்கப்பட்ட கம்பு பிப்ரவரி முதல் ஜூலை மாதங்களுக்கு இடையே அறுவடை செய்யபடுகிறது.கேழ்வரகு
வறண்ட நிலங்களில் மானவாரி விதைப்பாக கேழ்வரகு, பொதுவாக செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் விதைக்கபடுகிறது. கிழக்கு இராமநாதபுரம் பகுதிகளில் கேழ்வரகு ஏரி பாசன வசதி கொண்ட நிலங்களிலும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் விதைக்கபடுகிறது.சிறு தானியங்கள்
சிறு தானியங்கள் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் மாவட்டம் முழுவதும் விதைக்கபடுகிறது.பருத்தி
வறண்ட நிலங்களில் மானவாரி விதைப்பாக பருத்தி, பொதுவாக செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் விதைக்கபடுகிறது. சில சமயங்களில் பருத்தி விதைப்பு பருவ மழையை பொருத்து டிசம்பர் மாதம் வரை செய்யபடுகிறது. பரமக்குடி மற்றும் கமுதி தாலுக்காவில் நெல் விதைப்பை தொடர்ந்து பருத்தி ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விதைக்கபடுகிறது.பருப்பு வகைகள்
துவரம்பருப்பு விதைப்பு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செய்யபடுகிறது. மானவாரி விதைப்பாக உளுந்து, பாசிப்பயிறு மற்றும் தட்டைப்பயறு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விதைக்கபடுகிறது. துவரம்பருப்பு ஒரு கலப்புபயிராக சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலையுடன் விதைக்கபடுகிறது. உளுந்து, பாசிப்பயிறு தனிபயிராகவும், கரும்பு மற்றும் பருத்திக்கு கலப்பு பயிராகவும் விதைக்கபடுகிறது. தட்டைப்பயறு தனிபயிராகவும், சிறுதானியங்களுடன் கலப்பு பயிராகவும் விதைக்கபடுகிறது.நிலக்கடலை, இஞ்சி
மானவாரி விதைப்பாக நிலக்கடலை மற்றும் இஞ்சி டிசம்பர் முதல் ஜனவரி வரை மேலும் ஏப்ரல் முதல் மே வரையான மாதங்களில் விதைக்கபடுகிறது.மிளகாய்
மிளகாய், பாசன மற்றும் மானவாரியாக சாகுபடி செய்யபடுகிறது.


TOP

பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள் 22 ஜூலை 2017