முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்ல பட்டியலுக்குச்செல்ல எழுத்தின் அளவு - A + முரண் A A வண்ணம் English

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்

மாவட்ட தொழில் மையம்


மாவட்ட தொழில் மையம் கடந்த 1985 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டமாக ஒருங்கிணைக்கப்பட்ட காலம் முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட தொழில் மையம், இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் பசுமையான சூழலில் அமைந்துள்ளது.

பங்கு
மாவட்ட தொழில் மையம் முதன்மை பணிகளாக மாவட்டத்தில் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், குடிசை, கைவினைத் தொழில்கள் பதிவு செய்யப்பட்டு, அவை அனைத்தும் மாவட்ட தொழில் மையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு விரிவான திட்டம் வகுக்கப்பட்டு அந்தந்த தொழில்கள் அந்தந்த துறையில் மேன்மேலும் வளர்ச்சி அடைய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான இடா்பாடுகளை நீக்கி எளிய முறையில் தொழில் துவங்குவதற்காக மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒருமுனை தீர்வுக்குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் துவங்குவதற்கு உடனடி மின் இணைப்பு, திட்ட ஒப்புதல் மற்றும் அனைத்து உரிமங்கள் ஆகியவை பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் ஒரு முனை தீர்வுக்குழு கீழ் வரும் அந்தந்த துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு தொழில் முனைவோர்கள் எளிய முறையில் பயன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தொடர்பு கொள்ள
பொது மேலாளர்,
மாவட்ட தொழில் மையம்,
இராமநாதபுரம்
rmddic[at]gmail[dot]com
தொலைபேசி: 04567 - 230497
TOP

பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள் 22 ஜூன் 2017