முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்ல பட்டியலுக்குச்செல்ல எழுத்தின் அளவு - A + முரண் A A வண்ணம் English

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்

மீன்வளத்துறைகடற்கறையின் நீளம்


கடற்கரை பாக் ஜலசந்தி மன்னார் வளைகுடா மொத்தம்
கோரமண்டல கடற்கரை 77 160 237

TOP

மீன்வளம் – பொது விபரங்கள்


வ.எண் மீன்வளம் விபரங்கள் எண்ணிக்கை
1 விசைப்படகுகள் 1596
2 நாட்டுப்படகுகள் 4372
3 மீன்பிடி இறங்குதளங்கள் 12
4 மீனவ மக்கள் தொகை 171722
5 கடலோர மீனவ கிராமங்கள் 180
6 மீன்பிடித் தளங்கள் 17

TOP

மீன்பிடி படகுகள்


வ.எண் மீன்பிடி படகுகள் விசைப் படகுகள் நாட்டுப் படகுகள்
1 மண்டபம் 576 366
2 இராமேஸ்வரம் 818 951
3 இராமநாதபுரம் 202 3055
4 மொத்தம் 1596 4372

TOP

மீன்பிடி வலைகள்


வ.எண் வலைகள் எண்ணிக்கை
1 இழுவலை 3539
2 செவுள் வலை 59232
3 துாண்டில் 1399
4 கூண்டு 2412
5 கரைவலை 583
6 மற்றவை 572
7 மொத்தம் 72885

TOP

வலைகளின் வகையான மீன் உற்பத்தி


வ.எண் வலை வகை எடை (டன்னில்)
1இழு வலை49381
2சுற்று வலை1273
3செவுள் வலை32375
4மடி வலை536
5தூண்டில்3529
6மற்றவை414
மொத்தம்87508

TOP

முத்து மீன்வளம்
இராமநாதபுரம் கடற்கரை முத்து மீன்பிடிப்புக்காக நன்கு அறியப்படுகிறது. இம்மாவட்டத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னா்கள் கிழக்கு கடற்கரையில் உள்ள முத்து மீன்வளத்தின் மூலம் பயன் பெற்றனா். பாண்டியா்களைத் தொடா்ந்து ஆட்சி செய்த சோழா்கள் முத்து மீன்வளத்தை ஊக்குவித்தது மட்டுமல்லாமல் பாக் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதன் வளா்ச்சியை அதிகரிக்கச் செய்தனா். இக்கால கட்டத்தில் இந்தியாவிற்கு பயணம் செய்து வந்த மார்க்கோ போலோ (1260-1300) முத்து மீன்பிடிப்பிற்கான புரண உரிமை பாண்டியா்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். முத்து படுக்கைகளிலிருந்து சேகரிக்கப்படும் அதிக அளவிலான முத்துக்கள் மத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இராமநாதபுரம் கடற்கரை ஓரங்களில் முத்து மீன்வளம் குறைந்துவிட்டபடியால் வா்த்தக ரீதியாக முத்து மீன்வளம் குறைந்து காணப்படுகிறது.


சங்கு மீன்வளம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் தனித்துவமான சங்கு மீன்வளம் உள்ளது. ஜாதி சங்குகள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. நீரில் மூழ்கி சங்கு எடுத்தலில் 2000க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈடுபடுகின்றனா். அவா்களால் சேகரிக்கப்படும் புனித சங்குகள் ஆபரணங்கள் செய்யும் பொருட்டு மேற்கு வங்காளத்திற்கு சந்தைப்படுத்தப்படுகிறது. இது மீன்வளா்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக விளங்குகிறது.


இறால் வளா்ப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 162 இறால் பண்ணைகள் 378 கெக்டோ் பரப்பளவில் இயங்கி வருகின்றன. இப்பண்ணைகளிலிருந்து அறுவடை செய்யப்படும் இறால்களை ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஜரொப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் அந்நிய செலாவணியில் நம் நாடு கனிசமான வளர்ச்சி அடைந்துள்ளது.


கூண்டு மீன் வளா்த்தல்
இராமநாதபுரம் கடற்கரை கிராமங்களான தொண்டி, ஏா்வாடி, மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் ஓலைக்குடா பகுதிகள் மீனவா்களின் மாற்று வாழ்வாதாரமான கூண்டு மீன் வளா்த்தலுக்கு பொருத்தமாக உள்ளன. கூண்டுமீன் வளர்ப்பு திட்டத்தில், 6 மீட்டா் விட்டம் கொண்ட கூண்டுகள் அமைப்பதற்கான மானியம் மற்றும் உள்ளீட்டு பொருட்களுக்கான மானியம் வழங்கி மாநில அரசு மீனவர்களை ஊக்குவித்து வருகிறது. இதனால், கூண்டு மீன் வளர்ப்பிற்காக 75க்கும் மேற்பட்ட கூண்டுகள் அமைக்கப்பட்டு, வளா்ப்பு காலமான 6-7 மாதங்களில் ஒரு கூண்டிலிருந்து ஒரு டன் எடைக்கு அதிகமாக மீன்கள் அறுவடை செய்யப்படுகின்றன.


மீன் பதன ஏற்றுமதி தொழிற்சாலைகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி மற்றும் மண்டபம் பகுதிகளில் 3 மீன்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இறால், கடற்கணைகள், கணவாய் மீன்கள், நண்டுகள் மற்றும் மீன்கள் மீன்பிடிப்பின் மூலம் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறிய அளவிலான தொழிலதிபா்கள் மீன் உலா்த்துதலில் பங்கெடுத்துக் கொள்கின்றனா். கோழி வளா்ப்பு மற்றும் கால்நடை தீவன உற்பத்தியில் உலா்ந்த மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

TOP
பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள் 24 ஆகஸ்ட் 2016