முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்ல பட்டியலுக்குச்செல்ல எழுத்தின் அளவு - A + முரண் A A வண்ணம் English

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்

புதுவாழ்வு திட்டம்,இராமநாதபுரம்


தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம் புதுவாழ்வு திட்டம், இத்திட்டத்தின் மக்களின் தேவைகளை மக்களே கண்டறிந்து மக்களே திட்டமிட்டு, மக்களே கண்காணித்து, திட்ட நிதியினையும் மக்களே செலவழித்து மக்களின் முன்னேற்றத்திற்காக வறுமை போக்கி வளமான சமுதாயத்தை உருவாக்க கடந்த 2006 முதல் நமது மாவட்டத்தில் செவ்வனே செயல்படுத்தப்பட்டு வருகின்றது.மற்ற திட்டங்களை காட்டிலும், இத்திட்டத்தின் சிறப்பம்சம் திட்ட பயனாளிகள் மற்றும் – இலக்கு மக்களை கண்டறிவது மக்களே ஆவார்கள்.


இலக்கு மக்கள் ஆய்வு:
ஒவ்வொரு ஊராட்சியிலும் குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் 10-15 நபா்களை கொண்டு அக்குழுவிற்க மக்கள் பங்கேற்ப அடிப்படையில் அனைத்து குடும்பங்களையும், பங்கேற்க வைத்து சமூக வரைபடம் வரைந்து ஒவ்வொரு வீட்டிற்கும் அடையாள எண் வழங்கப்பட்டு, அந்த அடையாள எண் அட்டையினை அனைத்து மக்களின் முன்னிலையில் அனைவரின் பங்கேற்புடன் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டு உதாரணமாக வசதி படைத்தவா்களை குறிக்க தனி அடையாளமும் நடுத்தர மக்களுக்கு தனி அடையாளமும், ஏழை மக்களுக்கு தனி அடையாளமும், மிகவும் ஏழை மக்களுக்கு தனி அடையாளமும் வைத்து இலக்கு மக்கள் கண்டறியப்படுகிறார்கள்.
நடுத்தரம் மற்றும் வசதியான குடும்பங்களை சார்ந்தவா்கள் திட்டத்தில் நேரடியாக பயன் அடைய வாய்ப்பில்லை. ஏழை, மிகவும் ஏழை மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் நேரடியாக திட்டத்தின் மூலம் பயனடைவார்கள், திட்டம் மூலம் பயன்பெறும் கண்டறியப்பட்ட இலக்கு மக்கள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

திட்டம் செயல்படும் ஒன்றியங்கள்:

வ.எண் ஆரம்பித்த ஆண்டு வட்டாரம் பகுதி ஊராட்சிகள் எண்ணிக்கை கி.வ.ஒ சங்ககங்ளின் எண்ணிக்கை
1. 2006-2007 போகலூர் போகலூர் 13 13
2. 2006-2007 போகலூர் காமன்கோட்டை 13 13
3. 2007-2008 முதுகுளத்துார் முதுகுளத்துார் 15 15
4. 2007-2008 முதுகுளத்துார் தேரிருவேலி 15 15
5. 2007-2008 முதுகுளத்துார் சாம்பக்குளம் 16 16
6. 2008-2009 பரமக்குடி பரமக்குடி 13 13
7. 2008-2009 பரமக்குடி பார்த்திபனுார் 13 13
8. 2008-2009 பரமக்குடி விளத்துார் 13 13
9. 2009-2010 கமுதி கமுதி 15 15
10. 2009-2010 கமுதி அபிராமம் 12 12
11. 2009-2010 கமுதி நீராவி 12 12
12. 2009-2010 கமுதி பெருநாழி 14 14
13. 2011-2012 கடலாடி கடலாடி 20 20
14. 2011-2012 கடலாடி சாயல்குடி 20 20
15. 2011-2012 கடலாடி சிக்கல் 20 20
மொத்தம்     224 224

கண்டறியப்பட்ட இலக்கு மக்கள் குடும்பங்கள்:

வ.எண். வட்டாரம் மொத்த குடும்பங்கள் இலக்கு மக்கள் குடும்பங்கள் சதவீதம்
1. போகலுார் 10220 3942 38.5
2. முதுகுளத்துார் 21280 7162 33.6
3. பரமக்குடி 26810 5175 19.3
4. கமுதி 22025 9333 42.3
5. கடலாடி 26260 9040 34.4
மொத்தம் 111444 34652 31.0


பிரதான செயற்பாடுகள்

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம்
 • சுய உதவிக்குழுக்கள்
 • பஞ்சாயத்து அளவிலான சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு
 • மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோர் மேம்பாடு
 • இளைஞா் திறன்வளா்ப்பு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு
 • ஒத்த வாழ்வாதார தொழில் குழுக்கள்
 • புதுவாழ்வு மனநலத்திட்டம்
 • கிராம கற்றல் மையம்
 • நாட்டுக்கோழி குஞ்சுகள் பொரிப்பகம்
 • குக்கிராமங்களுக்கு போக்குவரத்து வாகன இயக்கம்
 • கால்நடை தீவன உற்பத்தி நிலையம்

தொடர்பு கொள்ள:
மாவட்ட திட்ட மேலாளா்
மாவட்ட புதுவாழ்வு சங்கம்
2-421, வசந்தபுரம்,,
மதுரை மெயின் ரோடு,
பரமக்குடி. – 623 707
இராமநாதபுரம் மாவட்டம்.
மின்னஞ்சல்: ramnadpvp[at]yahoo[dot]in
வலைத்தளம்: புதுவாழ்வு

பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2016