முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்ல பட்டியலுக்குச்செல்ல எழுத்தின் அளவு - A + முரண் A A வண்ணம் English

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்

இராமேஸ்வரம்


இந்துகளின் தெய்வமான ஸ்ரீ ராமனின் பரிசுத்த உறைவிடமான இராமேஸ்வரம் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கம் போன்றது. ஒரு இந்துவுடைய வாழ்க்கை இறை அருளைத்தேடி வாரணாசி (காசி) மற்றும் இராமேஸ்வரம் புனிதப்பயணம் செல்லுதல் மற்றும் புனித காவியமான இராமாயணம் இல்லாமல் முழுமையடையாது. இராமபிரான் 14 ஆண்டுகளை காட்டில் கழித்த பின் இங்கு வந்ததாக நாடோடிக்கதைகளில் சொல்லப்படுகிறது.


இராமனின் சகோதரனான இலக்குவனும் அனுமன் மற்றும் வானர சேனைகளும் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை சென்று இராவணனை இராமன் வென்று வர உதவியதாக புராணம் கூறுகிறது. இவர்கள் பாறைகளால் பாலம் அமைத்து கடலில் அமைந்துள்ள சேது கால்வாயைக்கடந்து இலங்கை சென்று வர உதவினர். இராமபிரான் இங்கு சிவ பெருமானை வணங்கி இந்த இடத்தை புண்ணிய பூமியாக மாற்றியுள்ளதாக நம்பப்படுகிறது. இது சைவம் மற்றும் வைணவம் சங்கமத்தைக்குறிக்கிறது. சைவர்களும் வைணவர்களும் கொண்டாடும் இடமான இங்குள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் முக்கியமானது. எனவேதான் இராமேஸ்வரம், முக்கிய தேசிய புனிதப் பயண மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.


இராமநாதசுவாமி கோவில் ஒவ்வொரு சுற்றுலாப்பிரியரின் விருப்பமாகும். இக் கோவில் அற்புதமான அமைப்பு, நீண்ட தாழ்வாரங்கள், கலையுணர்வுடன் செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் உயர்ந்த 38 மீட்டர் கோபுரம் கொண்டது.


இக்கோவிலின் கட்டிடப்பணி 12 ஆம் நூற்றாண்டில் சேதுபதி மறவரால் தொடங்கப்பட்டு பிரசித்தி பெற்ற மூன்றாவது பிரகாரமானது அவரது வாரிசுகளால் முடிக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீளமான பிரகாரமும், உலகின் மூன்றாவது பெரியதுமான இது, கிழக்கில் இருந்து மேற்காக 197 மீட்டரும் மற்றும் வடக்கு தெற்காக 133 மீட்டரும் கொண்டது. கி.பி.1897-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இக்கோவிலில் வழிபாடு செய்தார். இந்தியாவிலுள்ள 12 ஜோதி லிங்க வழிபாட்டுத் தலங்களுள் முக்கியமானதாகும். இங்கு சிவபெருமான் ஜோதிலிங்க வடிவில் வழிபடப்படுகிறார்.இராமநாத சுவாமி கோவில் கோபுரம் இராமநாத சுவாமி கோவில் கோபுரம் இராமநாத சுவாமி கோவில் யானை இராமநாத சுவாமி கோவில் பிரகாரம்

இராமநாத சுவாமி திருக்கோவில்


இராமபிரான் ஒரு குறிப்பிட்ட மங்களகரமான நேரத்திற்குள் சிவ வழிபாடு செய்ய ஒரு லிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமனை அனுப்பினார். ஆனால் அனுமன் வர நேரமானதால் சீதை ஒரு லிங்கத்தை உருவாக்கி இராமபிரான் வழிபட ஏற்பாடு செய்தார். இந்த லிங்கம் தான் இராமநாத சுவாமி என்று கோவிலில் வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தெய்வம் ஆகும். அனுமனை சமாதானம் செய்ய அவர் கொண்டு வந்த லிங்கமும் சற்று வட திசையில் அமைக்கப்பட்டது. மேலும், அனுமனின் கொண்டு வந்த லிங்கத்திற்கே முதலில் பூசை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்.


அக்னி தீர்த்தம்


கோவில் கோபுரத்திற்கு முன்னால் சுமார் 100 மீ. தொலைவில் உள்ள அமைதியான ஆழமற்ற கடல் பகுதியான அக்னி தீர்த்தம் மிகப்புனிதமாகக்கருதப்படுகிறது. இந்தபுனித நீராடுதல் பாவங்களை நீக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். மற்ற முக்கிய தீர்த்தங்களாகப்பக்தர்களால் கருதப்படுபவை கோவிலுக்குள்ளும் கோவிலைச்சுற்றியும் அமைந்துள்ளன.


ஜடாயு தீர்த்தம்


இராமபிரான் லட்சுமணனோடு இணைந்து சீதாப்பிராட்டியைத் தேடி அலைந்த போது ஜடாயு என்ற காயத்தினால் அவதியுற்ற கழுகைச் சந்தித்தனர். இராவணன் அழுதுகொண்டிருக்கும் சீதாப்பிராட்டியைத் தூக்கிச் சென்றதையும் அவனோடு போரிட்டு காயம் அடைந்ததையும் சொல்லிவிட்டு இராமபிரானின் கரங்களில் இறந்து போகிறார். ஜடாயுவின் அன்பினால் ஈர்க்கப்பட்ட இராமபிரான் ஜடாயுவின் இறுதிச்சடங்குகளைச்செய்து ஒரு கோவிலை ஏற்படுத்தினார்.


இராமநாத சுவாமி கோவில் பிரகாரம் அக்னி தீர்த்தம் ஜடாயு தீர்த்தம்

TOP