மூடு

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை

தமிழக அரசின் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஏழை எளிய பெண்கள் , குழந்தைகள் மூத்த குடிமக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் நல்வாழ்வினை உறுதி செய்து அவர்களின் வாழ்க்கை முறையினை மேம்படுத்துவதற்கு பின்வரும் பல்வேறு திட்டங்களையும் பெண்கள் , குழந்தைகள் (ம) முதியோர்களை காக்கும் சட்ட்ங்களுடன் செயல்படுத்தி வருகிறது.

திட்டங்கள்

 1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்.
 2. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்.
 3. ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்.
 4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம்.
 5. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்.
 6. முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம்.
 7. சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.
 8. மூன்றாம் பாலினர்களுக்கான நலத்திட்டங்கள்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விபரங்கள். – பதிவிறக்கம்

சட்டங்கள் மற்றும் விதிகளை செயற்படுத்துதல்

 1. வரதட்சிணை தடுப்புச் சட்டம் -1961.
 2. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் – 2005.
 3. குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் – 2006.
 4. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் – 2007.
 5. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டம் -2013)
 6. தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகளும் இல்லங்களுக்கான (நெறிப்படுத்துதல்) விதிகள் 2015.

தொடர்புக்கு:

மாவட்ட சமூகநல அலுவலர்,
சமூகநல அலுவலகம், இராமநாதபுரம்-623503.

சம்மந்தப்பட்ட விரிவாக்க அலுவலர்(சந) மற்றும்
மகளிர் ஊர்நல அலுவலர்கள்.