மூடு

மாவட்ட ஆட்சியர் சுருக்கக்குறிப்பு

மாவட்ட ஆட்சியர் திரு கொ.வீர ராகவா ராவ் இ.ஆ.ப.,

திரு. கொ. வீர ராகவ ராவ் இ.ஆ.ப (2007)

மாவட்ட ஆட்சித் தலைவா், இராமநாதபுரம்

ஆற்றிய பதவிகள்:

 1. உதவி ஆட்சியா் (பயிற்சி), மதுரை.
 2. சார் ஆட்சியா், சேரன்மகாதேவி, திருநெல்வேலி.
 3. கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி), கடலூா்.
 4. மாநகராட்சி ஆணையா், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.
 5. திட்ட இயக்குநா், தானே புயல் புனா்வாழ்வு.
 6. மாவட்ட ஆட்சித் தலைவா், திருவள்ளுா்.
 7. மாவட்ட ஆட்சித் தலைவா், மதுரை.

பெற்ற விருதுகள்:

 1. மதுரை மாவட்டத்தில், தோ்தலில் சிறந்த முறையில் வாக்காளா்கள் விழிப்புணா்வு மற்றும் பங்கேற்பிற்கான இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேசிய விருது 25.01.2017 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவரிடமிருந்து பெறப்பட்டது
 2. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறந்த பொது நிர்வாக செயல்பாடு மற்றும் அமைப்புமுறைக்கான சான்று 30.06.2017 அன்று மாண்புமிகு முதலமைச்சரிடமிருந்து பெறப்பட்டது.
 3. திருவள்ளுா் மாவட்டத்தில், மக்களவைக்கான பொது தோ்தல் 2014ஐ சிறந்த முறையில் நடத்தியமைக்கும், இளம் வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் அதிகமாக சோ்த்தமைக்குமான விருது, 25.01.2015 அன்று மேதகு தமிழக ஆளுநரிடமிருந்து பெறப்பட்டது.
 4. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை திருவள்ளுா் மாவட்டத்தில் சிறந்தமுறையில் செயல்படுத்தியமைக்கான தேசிய விருது 02.02.2016 அன்று பெறப்பட்டது.
 5. தேசிய அளவில், தூய்மையான வழிபாட்டு தலங்கள் பட்டியலில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு முதலிடம் வழங்கப்பட்டதற்கான விருது 02.10.2017 அன்று பெறப்பட்டது.
 6. மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை திறம்பட செயல்படுத்திய மாவட்டமாக மதுரை மாவட்டம் அறிவிக்கப்பட்டு 03.12.2017 அன்று மாண்புமிகு குடியரசுத்தலைவரிடமிருந்து தேசிய விருது பெறப்பட்டது.
 7. மூத்த குடிமக்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை திறம்பட வழங்கிய மாவட்டமாக மதுரை மாவட்டம் அறிவிக்கப்பட்டு 01.10.2018 அன்று மாண்புமிகு துணை குடியரசுத்தலைவரிடமிருந்து தேசிய விருது பெறப்பட்டது.
 8. மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகளுக்காக மாண்புமிகு முதலமைச்சரிடமிருந்து பசுமை விருது 13.06.2019 அன்று பெறப்பட்டது.
 9. இராமநாதபுரம் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டத்தில், பண்ணை குட்டைகளை சிறப்பான முறையில் உருவாக்கியதற்காக SKOCH குழுமத்தால் 11.01.2020 அன்று தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டது.

கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் (கணிப்பொறியியல்), முதுகலைப் பட்டம் (பப்ளிக் பாலிசி)

சொந்த ஊா் : குண்டூா் மாவட்டம், ஆந்திரபிரதேசம்.

பொழுதுபோக்கு : சதுரங்கம், கராத்தே(பிளாக் பெல்ட்), சிலம்பம், யோகா , மராத்தான், நீச்சல்.