மூடு

தேவிப்பட்டினம் (நவ பாஷாணம்)

வழிகாட்டுதல்

கடற்கரை கிராமமான இது நவபாஷாணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமபிரான் நவக்கிரகங்களை இங்கு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவிக்கு ஒரு கோவிலும் அருகில் உள்ளது. இந்துக்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை இங்கு செய்கிறார்கள்.

புகைப்பட தொகுப்பு

  • தேவிப்பட்டினம் மீன்பிடி படகுகள்
  • தேவிப்பட்டினம் நவபாஷாணம்

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம், இராமநாதபுரத்திலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரத்திலிருந்து 145 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு விமான நிலையம் ஆகும்.

தொடர்வண்டி வழியாக

இராமநாதபுரம் புகை வண்டி நிலையம் விரைவு மற்றும் சாதாரண புகை வண்டிகளால் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாலை வழியாக

இராமநாதபுரத்தில் ஒரு பேருந்து நிலையம் உள்ளது. தமிழ்நாட்டின் பிரதான நகரங்களுக்கு பொது / தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இராமநாதபுரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.