மூடு

நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்

ஆருத்திரா தரிசனம்

உத்திரகோசமங்கையில் மங்களநாத சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படும் பண்டைய சிவன் கோயில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் மட்டுமே வேறு எங்கும் காண முடியாத ஆறு அடி உயர மரகதத்தால் (எமரால்டு) ஆன நடராஜருடைய மூர்த்தி உள்ளது. கோவிலுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள இந்த நடராஜருடைய மூர்த்தியானது சந்தனத்தால் மூடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மார்கழித் திங்கள், திருவாதிரை நாளில் ஆருத்திரா தரிசனம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது நடராஜருடைய மூர்த்தியின் மேல் பூசப்பட்டுள்ள சந்தனமானது அகற்றப்பட்டு, அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. பின்னர், பக்தர்கள் மகரத நடராஜ மூர்த்தியை வணங்க அனுமதிக்கப்படுகிறார்கள். மரகத நடராஜரைத் தரிசிக்க, இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

எர்வாடி சந்தனக்கூடு விழா

எர்வாடி சந்தனக்கூடு விழா என்பது எர்வாடி தர்காவில் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா ஓலியல்லாஹ்வின் ஆண்டு நினைவைக்கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். இது ஒரு மாதம் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது, இஸ்லாமிய மாதமான து-அல்-கியாதாவில் கொண்டாடப்படுகிறது.

சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷாவின் பாதுஷா நாயகம் அடக்க தலம் எர்வாடி தர்காவில் உள்ளது. எர்வாடி தர்காவானது, மத நல்லிணக்கத்தின் சின்னமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்டிலிருந்தும் நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் அனைத்து மதத்தைச்சார்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் திரளாகக்கலந்து கொள்வார்கள்.

பொதுவாக மாவட்ட நிர்வாகம் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கிறது. மாநில அரசு மற்றும் தமிழக போக்குவரத்துக் கழகமும் இணைந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏர்வாடிக்கு ஆயிரக்கணக்கான சிறப்புப்பேருந்துகளை இயக்குகிறது.