மூடு

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சமூக பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு கீழ்காணும் திட்டங்கள் மானியம் மற்றும் வங்கிக் கடனுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நிலம் மேம்பாட்டுத் திட்டம் : –

 • 18 முதல் 65 வயது வரை உள்ளவராக இருத்தல் வேண்டும்.
 • நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தொழில்முனைவோர் திட்டம்: –

 • 18 முதல் 65 வயது வரை உள்ளவராக இருத்தல் வேண்டும்.
 • குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்

 • 18 முதல் 45 வயது வரை உள்ளவராக இருத்தல் வேண்டும்.
 • குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
 • வாகன கடன் பெறுவதற்கு பேட்ச் எண் உடன் கூடிய ஓட்டுநர் உரிமம் இருத்தல் வேண்டும்

மருத்துவமனை, மருந்துக்கடை கண்கண்ணாடியகம் முடநீக்கு மையம் மற்றும் ரத்த பரிசோதனை மையம்:-

 • கடன் மற்றும் மானியம் கோரும் தொழிலினை பற்றி நன்கு அறிந்தவராகவும் அத்தொழில் தொடர்பான அனுபவம் இருத்தல் வேண்டும்
 • மருத்துவ துறையில் பதிவு செய்திருக்க வேண்டும்

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம்

 • 12 முதல் 20 வரையிலான ஆதி திராவிட பெண்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள குழுவாக இருக்க வேண்டும்
 • வேறு எந்த அரசு திட்டத்திலும் மானியம் பெற்றிருக்க கூடாது

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம்:

 • 12 முதல் 20 வரையிலான ஆதி திராவிட பெண்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள குழுவாக இருக்க வேண்டும்
 • வேறு எந்த அரசு திட்டத்திலும் மானியம் பெற்றிருக்க கூடாது

மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி திட்டம்

 • குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
 • விண்ணப்பதாரர் தான் வறிய நிலையில் உள்ளார் என்பதற்கான உறுதி வாக்குமூலம் தரவேண்டும்

துரித மின் இணைப்பு திட்டம்

 • குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
 • 5.00 ஏக்கர் புன்செய் நிலமோ அல்லது 2.50 ஏக்கர் நன்செய் நிலமோ உடையவராக இருத்தல் வேண்டும்
 • விண்ணப்பதாரர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருத்தல் வேண்டும்

மேற்காணும் அனைத்து திட்டங்களுக்கும் சாதிச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம், திட்ட அறிக்கை, விலைப்புள்ளி திட்டம் தொடர்பான பயிற்சி மற்றும் சான்று இருத்தல் வேண்டும். இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும்

விண்ணப்பம் கீழ்கண்ட இணைய தளத்தில் மட்டுமே பதிவுசெய்யப்படும்:-

இந்து ஆதி திராவிடர் : http://application.tahdco.com

பழங்குடியினர்: http://fast.tahdco.com

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-

மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
இராமநாதபுரம்

அலைபேசி எண் :9445029472
தொலைபேசி எண் :04567-231039