மூடு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம்

மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகர்புறங்களில் 15.09.1982 அன்று உருவாக்கப்பட்டது.

சத்துணவுத் திட்டத்தின் நோக்கம்

  • பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல்.
  • ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்.
  • பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல்.
சத்துணவுத் திட்டம் துவங்கப்பட்ட முதல் நாளது வரை செயல்படுத்திய துறைகள்
வ.எண் துறை காலம்
1 பள்ளிக்கல்வித்துறை 1982 முதல் மே 1990 வரை
2 ஊரக வளா்ச்சித்துறை சூன் 1990 முதல் செப்டம்பா் 1992 வரை
3 சமூக நலத்துறை அக்டோபா் 1992 முதல் செப்டம்பா் 1997
4 ஊரக வளா்ச்சித்துறை அக்டோபா் 1997 முதல் 19 சூலை 2006 வரை
5 சமூக நலத்துறை 20 சூலை 2006 முதல் நாளது வரை (ஊரகம்),23 ஆகஸ்டு 2007 முதல் நாளது வரை (நகா்புறம்)

சத்துணவுத் திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலம் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிகள், தேசிய தொழிலாளர் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் ஆகியவற்றில் பளிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதி மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சத்துணவுத் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு பயனாளிக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களின் அளவு மற்றும் கலோரி – புரதச்சத்து விபரங்கள்
வ.எண் உணவுப் பொருட்களின் பெயர் 1-5 வகுப்பு(உஅ*) 6-10 வகுப்பு(உஅ*) 1-5 வகுப்பு(க^) 6-10 வகுப்பு(க^) 1-5 வகுப்பு(பு#) 6-10 வகுப்பு(பு#)
1. அரிசி 100 150 346 519.00 6.40 9.00
2. பருப்பு 15 15 50.25 50.25 3.35 3.35
3. எண்ணெய் 3 3 27 27 0 0
4. உப்பு 1.9 1.9 0 0 0 0
5. காய்கறிகள், தாளிதம் மற்றும் எரிபொருள் (பருப்பு பயன்படுத்தும் நாட்கள்) 1.30 1.40 37.80 45.36 1.62 1.94
6. காய்கறிகள், தாளிதம் மற்றும் எரிபொருள் (பருப்பு பயன்படுத்தாத நாட்கள்) 1.70 1.80 37.80 45.36 1.62 1.94
7. முட்டை 1(46 கிராம்) 1(46 கிராம்) 79.58 79.58 6.11 6.11
8. வாழைப்பழம் 1(100 கிராம்) 1(100 கிராம்) 116 116 1.20 1.20
9. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, (செவ்வாய்) 20 20 9.90 9.90 0.59 0.59
10. உருளைக்கிழங்கு (வெள்ளிக்கிழமை) 20 20 2.80 2.80 0.05 0.05

உஅ* – உணவின் அளவு (கிராமில்), க^- கலோரி, பு# – புரதம் (கிராமில்)

சத்துணவு மையங்கள் மற்றும் பயனாளிகள் எண்ணிக்கை
வ. எண் விபரம் மையங்கள் எண்ணிக்கை 1-5 வகுப்பு மாணவர்கள் 6-8 வகுப்பு மாணவர்கள் 9-10 வகுப்பு மாணவர்கள் மொத்தம்
1 துவக்கப்பள்ளிகள் 847 41586 0 0 41586
2 நடுநிலைப்பள்ளிகள் 201 0 18983 0 18983
3 உயர்நிலைப்பள்ளிகள் 165 0 0 14395 14395
4 மேல்நிலைப்பள்ளிகள் 4 0 0 123 123
5 பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி 7 0 0 650 650
மொத்த மையங்கள் மற்றும் பயனாளிகள் 1224 41586 18983 15168 75737

திட்டத்திற்கென மாநில அரசால் உணவூட்டு மானியங்கள், சமையலறை பழுதுபார்ப்பு பணிகள், புதிய சமையலறையுடன் கூடிய இருப்பறை கட்டிடங்கள் கட்டுதல், எரிவாயு இணைப்பு வழங்குதல், சத்துணவு மையங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசால் தேசிய திட்டம், கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் மதிப்பீடுகள் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள், திட்டத்தினை பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக விளம்பரங்கள் மேற்கொள்ளுதல், சத்துணவு பணியாளர்களுக்கு அவ்வப்போது புத்தாக்க பயிற்சிகள் வழங்குதல் ஆகிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சத்துணவு மையங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்துணவுத்திட்டத்திற்காக கிராம அளவிலான குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுக் குழு, வட்டார, கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சத்துணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.

பப்பாளி மற்றும் முருங்கை கன்று நடுதல்:

இம்மாவட்டத்தில் அரசு தோட்டப் பண்ணையில் இருந்து 1224 மையங்களுக்கும் இரண்டு கன்றுகள் வீதம் பப்பாளி மற்றும் முருங்கை கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டுள்ளது.

அழுத்த சமையற்கலன்:

இம்மாவட்டத்தில் 1224 சத்துணவு மையங்களில் 756 சத்துணவு மையங்களுக்கு அழுத்த சமையற்கலன் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறுஞ்செய்தி மூலம் உணவு உண்ணும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை விபரங்களை கண்காணித்தல்

பள்ளிகளில் தினந்தோறும் சத்துணவு உண்ணும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை விபரங்களை சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்கள் மூலம் கட்டணமின்றி 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல்கள் மாநில மற்றும் தேசிய அளவில் கண்காணிக்கப்படுகிறது.

சத்துணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் கீழ்காணும் விபரப்படி பல்வகை கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படுகிறது.

உணவு வகை பட்டியல் விபரம்

முதல் மற்றும் மூன்றாவது வாரம் :
நாள் உணவுப்பட்டியல்
திங்கட் கிழமை வெஜிடேபிள் பிரியாணி + மிளகு முட்டை
செவ்வாய் கிழமை கொண்டைக்கடலை புலாவு + தக்காளி மசாலா முட்டை
புதன் கிழமை தக்காளி சாதம் + மிளகு முட்டை
வியாழக்கிழமை சாம்பரர் சாதம் + சாதா முட்டை
வெள்ளிக் கிழமை கறிவேப்பிலை சாதம்/கீரை சாதம் + உருளைக்கிழங்கு தக்காளி சோ்த்து வேகவைத்த முட்டை
இரண்டாம் மற்றும் நான்காவது வாரம் :
நாள் உணவுப்பட்டியல்
திங்கட் கிழமை பிசிபேளாபாத் + வெங்காயம், தக்காளி முட்டை மசாலா
செவ்வாய் கிழமை மிக்சா்ட் மீல் மேக்கா் (ம) காய்கறிகள் சாதம் + மிளகு முட்டை
புதன் கிழமை புளிசாதம் + தக்காளி மசாலா முட்டை
வியாழக்கிழமை எலுமிச்சம்பழ சாதம் + மசாலா முட்டை
வெள்ளிக் கிழமை சாம்பரர் சாதம் + வேகவைத்த முட்டை/ வறுத்த உருளைக்கிழங்கு.
  • ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் காய்கறி மற்றும் கீரை தோட்டம், முருங்கை, பப்பாளி, கருவேப்பிலை மரம் நடப்பட்டுள்ளது.
  • சத்துணவு மையங்களையும் நவீனமையமாக்கும் பொருட்டு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
  • புதியவகை கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் தயாரிப்பதற்கான பலவகை பொடிகள் தயாரிக்க மற்றும் இஞ்சி, பூண்டு அரைத்து சமையல் செய்ய அரவை இயந்திரங்கள் (மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள்) வழங்கப்பட்டுள்ளது.
  • பல்வகையான சாதங்களும், முட்டை வகைகளும் சமைத்து வழங்கப்படுவதினால் பள்ளிக்கு வருகை புரியும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகமாவதுடன், உணவு வீணாவது தவிர்க்கப்படுகிறது.
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட உயர்ந்துள்ளது.
  • அரசாணை நிலை எண்.101 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை நாள்.20.06.2007-ன்படி இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கீழ்காணும் நாட்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.
தொடக்கம் இனிப்பு பொங்கல் வழங்கும் நாள்
2001 முதல் நாளது வரை அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாள் – செப்டம்பர் 15
2001 முதல் நாளது வரை பெருந்தலைவர் காமராஜர் அவர்களி பிறந்த நாள் – ஜுலை 15
2001 முதல் நாளது வரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த நாள் – ஜனவரி 17

கட்டணமில்லா தொலைபேசி எண்

இராமநாதபுரம் மாவட்டத்தின் சத்துணவு மையங்களில் காணப்படும் குறைபாடுகளை பொது மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 4187 -ற்கு தகவல் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.