மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட நிர்வாகத்தில் ஒரு முக்கிய பங்கை மாவட்ட ஆட்சியர் வகித்து வருகிறார். இ.ஆ.ப அலுவலர்கள் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகின்றனர். இவரே தனது அதிகார எல்லைக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் மாவட்ட நீதிபதியும் ஆவார். இவர் முக்கியமாக திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுத் தேர்தல்கள், ஆயுத உரிமம் வழங்கல் போன்றவற்றை மேற்கொள்கிறார்.

கூடுதல் ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்டத்தில் பல்வேறு சட்டங்களில் கீழ் வருவாய் நிர்வாகத்தை இயக்குகிறார். இவர் கூடுதல் மாவட்டநீதிபதியாகவும் செயல்படுகிறார். இவர் முக்கியமாக குடிமைப் பொருட்கள், நில விவகாரங்கள், சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் போன்றவற்றை கவனிக்கிறார்.

மாவட்ட வருவாய் அலுவலர் (மா.வ.அ.) மற்றும் துணை ஆட்சியர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு அவருடைய பணிகளைச் செவ்வனே செய்ய உதவுகிறார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியரின் அனைத்து பிரிவுகளையும் கவனித்து வருகிறார். அவர் பொது நிர்வாகம் மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தினசரி அலுவல்களையும் மேற்பார்வையிடுகிறார்.

இ.ஆ.ப / மா.வ.அ அலுவலருக்கு இணையான திட்ட அலுவலர், மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை, தனிப்பட்ட உதவியாளர், பஞ்சாயத்து மேம்பாடு, உதவி இயக்குநர் டவுன் பஞ்சாயத்துகள், மாநகராட்சி ஆணையர் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆணையர் ஆகியோர் பஞ்சாயத்து வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தொடர்பான பணிகளில் உதவி செய்கின்றனர்.