மூடு

மாவட்டம் பற்றி

இராமநாதபுரம் 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, பால்க் நீரிணையில் தன பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.08.03.1985 தேதியிட்ட அரசாணை எம்.எஸ்.ந.347ன் படி, இராமநாதபுரம் 15.03.1985 அன்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:

  1. திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டங்கள் கொண்ட சிவகங்கை மாவட்டம்.
  2. திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் இராஜபாளையம் வட்டங்கள் உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டம்.
  3. திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் வட்டங்கள் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம்.

24.07.2018 தேதியிட்ட அரசாணை எண்.270ன் படி, இராஜ சிங்க மங்கலம் (ஆர். எஸ். மங்கலம்) என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.

தற்போதைய இராமநாதபுரம் மாவட்டமானது கடலாடி, கீழக்கரை மற்றும் இராஜ சிங்க மங்கலம் (ஆர். எஸ். மங்கலம்) ஆகிய மூன்று வட்டங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது வட்டங்கள் கொண்டது.

முக்கிய விபரம்
பெயர் எண்ணிக்கை
பரப்பளவு (ச.கிமீ) 4068.31
மொத்த மக்கள் தொகை 13,53,445
ஆண்கள் 6,82,658
பெண்கள் 6,70,787
மக்கள் தொகை அடர்த்தி (ச.கிமீ) 330
மொத்தம் கல்வி அறிவு பெற்றவர்கள் 9,78,946
கல்வி அறிவு பெற்றவர்கள் – ஆண்கள் 5,36,487
கல்வி அறிவு பெற்றவர்கள் – பெண்கள் 4,42,459

புவியியல் இருப்பிடம்

இராமநாதபுரம், 90 05′ மற்றும் 90 50′ வடக்கு அட்சரேகைகளுக்கும் 780 10′ மற்றும் 790 27′ கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் மேற்கே விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும் வடக்கில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன. கிழக்கில் பால்க் நீரிணையும் தெற்கில் மன்னார் வளைகுடாவும் அமைந்துள்ளன.

பொதுவான காலநிலை

மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் ஒரு உலர்ந்த, வெப்பமான வானிலையே காணப்படுகிறது. வட கிழக்கு பருவ மழைக்காலமான நவம்பர் மற்றும் டிசம்பரில் வெப்பம் சற்று தணிந்து காணப்படுகிறது.

மக்களும் கலாச்சாரமும்

சங்க கால பாரம்பரிய தமிழ் இலக்கியம், நாட்டின் நில வகைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைகளாக இயற்பியல், புவியியல் மற்றும் மக்களின் வாழ்வியல் அடிப்படையில் பாகுபாடு செய்துள்ள்ளது. இந்த இயற்கை அடிப்படையான நில வகைப்பாடின் மூலம் நிலத்தைச்சார்ந்த மக்களின் வாழ்க்கை முறை மற்றும் இயற்கையைச்சார்ந்த உறவு பற்றி நாம் அறிய முடிகிறது.

ஐந்து நிலத்திணைகளில் பாலை நிலத்திற்கென்று சில அடிப்படை குணமுண்டு. மணற்குன்றுகள் நிறைந்த இடம் என்று சொல்வதை விட முல்லையும் குறிஞ்சியும் இயல்பு திரிந்த நிலப்பரப்பு என்று சொல்லலாம். பிரிவும் பிரிவு சார்ந்த துயரமும் இந்நிலப்பரப்ப்பிற்கான மக்களின் ஒழுக்கம் ஆகும். கொற்றவை அல்லது காளி இந்நிலத்திற்கான தெய்வம் ஆவாள். மற்ற காவல் தெய்வங்கள் வழிபாடும் உண்டு.