மூடு

பொது சுகாதாரம்

நோக்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைதுாரத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வீட்டிற்கும் தரமான மருத்துவ வசதிகளை கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல் கடின முயற்சியின் மூலம் பஞ்சாயத்தின் அனைத்து வகுப்பினர்களுக்கும் நோய் தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் ஊக்கப்படுத்தும் வசதிகளை அளித்து ஆரோக்கியமான மக்களை உறுவாக்குவதில் நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம்.

உள்கட்டமைப்பு:

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தலைமை மருத்துவமனையும், 9 அரசு மருத்துவமனைகளும் உள்ளன.

5 வட்டங்களை கொண்ட இராமநாதபுரம் சுகாதார மாவட்டம் மற்றும் 6 வட்டாரங்களை கொண்ட பரமக்குடி சுகாதார மாவட்டம் ஆகிய இரண்டு சுகாதார மாவட்டங்கள் நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. கிராமபுறம் மற்றும் நகர் புறச்சேவையில் 13 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 40 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 நகர் நல மையங்கள் செயல்பட்டு வருகின்றது. மேலும் 259 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வரைபடம்

மாவட்ட மருத்துவமனைகள் - வரைபடம்

மாவட்ட மருத்துவமனைகள் வரைபடம்

நலத்திட்டங்கள்

தடுப்பூசி பணி

அனைத்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கப்படுகிறது.

வயது தடுப்பூசி
பிறந்த உடன் பி.சி.ஜி
போலியோ ஜீரோ டோஸ்
ஹெப் பி(24 மணி நேரத்திற்குள்)
6வது வாரம் பெண்டா – 1
போலியோ-1
ஐபிவி-1
10வது வாரம் பெண்டா-2
போலியோ-2
14வது வாரம் பெண்டா-3
போலியோ-3
ஐபிவி-2
9வது மாதம் எம்.ஆர்- 1
ஜே.ஈ – 1 (தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில்)
16-24 வது மாதம் டிபிதி – 1
போலியோ அதிகரிப்பதாக
எம்.ஆர்- 2
ஜே.ஈ – 2 (தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில்)
5-6 வது வருடம் டிபிதி – 2
10வது வருடம் டெட்டனஸ் தடுப்பூசி
16வது வருடம் டெட்டனஸ் தடுப்பூசி
கர்ப்பிணி தாய்மார்கள் டெட்டனஸ் தடுப்பூசி – 1 கர்ப்ப கால ஆரம்பம்
டெட்டனஸ் தடுப்பூசி – 2 முதலாம் தடுப்பூசி கொடுத்த நாலு வாரங்களுக்கு பிறகு
முன்று வருடங்களுக்குள் 2 டெட்டனஸ் தடுப்பூசி கொடுக்கபட்டிருந்தால் ஒரு அளவு அதிகமாக கொடுக்க வேண்டும்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்:

தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் தகுதி வாய்ந்த நபர்களுக்கு தரமான மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து மருத்துவ செலவினையும் இத்திட்டம் வழங்குகின்றது. இதன் மூலம் குடும்பத்தின் நிதி சுமை குறைக்கப்படுகிறது மேலும், பொது சுகாதார அமைப்பில் இணைவதன் மூலம் உலகளாவிய சுகாதாரத்தை நோக்கி பயணிக்கின்றது.

குறிப்பிட்ட நோய்கள் மற்றும் நோய் கண்டறியும் முறைகளுக்கான செலவினை இத்திட்டமே ஏற்பதால் பணமற்ற மருத்துவ சேவை கிடைக்கின்றது. ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மருத்துவ சேவை பெறலாம் சில குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட மருத்துவ சேவைக்கு 2 லட்சம் வரை வழங்கப்படுகின்றது. மேலும் தொடர் சிகிச்சைக்கான செலவினையும் ஏற்கின்றது.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்:

ஏழை தாய்மார்களின் கர்ப்பக்காலத்தில் ஊட்டச்சத்து உணவுக்காகவும், மற்றும் கர்ப்பக்காலத்தில் தாய்மார்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்வதற்காகவும், எடைகுறைவான குழந்தை பிறப்பினை தடுப்பதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. உதவித்தொகை 3 தவணைகளாக நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது (முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் ரூ.4000 வீதம் 3 தவனைகளாக வழங்கப்படுகின்றது. முன்கூட்டி பதிவு செயும் போது முதல் தவணையும் , அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பின் போது 2வது தவணையும், முழுமையாக குழந்தைகளுக்கு தடுப்புசி போட்டபின் 3வது தவணையும் வழங்கப்படுகிறது ) இவ்உதவித்தொகை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரூ.12,000 லிருந்து ரூ.18,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொற்றா நோய் தடுப்புத் திட்டம்

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் நிதி உதவியுடன் மாவட்ட சுகாதார சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இதன் மூலம் தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், சிகிச்சையளித்தல் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

  • அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றாநோய் மையங்கள் செயல்பட்டு வருகின்றது.
  • 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.
  • 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்று நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.
  • நோயுள்ள நபர்களை உறுதி செய்யும் பரிசோதனை அல்லது மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது.
  • நோய் தாக்கம் அதிகம் உள்ள நபர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
  • நோயாளிகளின் மருத்துவ படிவம், அட்டைகள் மற்றும் பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது.
  • அனைத்து நிகழ்வுகளும் இணையதள பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டம்

மலேரியா:அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மலேரியா கண்டறியும் வசதிகள் அமையப்பெற்றுள்ளன. காய்ச்சல் கண்ட அனைவருக்கும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் இரத்த தடவல்கள் எடுக்கப்பட்டு 24 மணி நேரத்தில் மலேரியா பரிசோதனை செய்யப்படுகிறது. இரத்த பரிசோதனையில் மலேரியா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் NVBDCP அட்டவணைப்படி மருத்துவ சிகிச்சையளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வக நுட்புனர்களுக்கு மலேரியா நோய் கண்டறியும் மற்றும் சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு சிகிச்கைக்குறிய மருந்துகள் வழங்கப்படுகிறது. ஆஷா பணியாளர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பூரண சிகிச்சை பெற 14 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல்: இது ஏடிஸ் கொசு மூலம் பரவும் ஒரு வகை வைரஸ் நோயாகும். தலைவலி, காய்ச்சல், தசை மற்றும் மூட்டுவலி, மூச்சு திணறல், வாந்தி ஏற்படும். சில சமயங்களில் இரத்த தட்டுக்கள் குறைவும் ஏற்படும். நிலவேம்பு, மலைவேம்பு மற்றும் பப்பாளி சாறு போன்ற இந்திய மருந்துகள் நோயை குணப்படுத்த பயன்படுகிறது. நோய் கண்காணிப்பு பணி தினசரி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்போது நோய் கட்டுப்பட்டில் உள்ளது.

லெப்டோபைரோஸிஸ்: இது விலங்குகளினால் பரவும் வைரஸ் நோயாகும். குறித்த நேரத்தில் நோய் கண்டறிந்து சிகிச்சையளித்தல் மற்றும் கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. கண்காணிப்பு மற்றும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

அம்மா குழந்தைகள் நலப்பெட்டக திட்டம்:

இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் நடைபெற்ற அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.1000 மதிப்புள்ள குழந்தை மற்றும் தாய்க்கு தேவைப்படும் 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நலப்பெட்டம் வழங்கப்படுகிறது. நலப்பெட்டகத்தில் குழந்தைக்கு துண்டு, ஆடை, மெத்தை, கொசுவலை, எண்ணை, சோப்பு, பொம்மை, மருந்துகள் இடம்பெற்றுள்ளது.

கண்ணொளி காப்போம் திட்டம்:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 6 வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கண் பரிசோதனை கண்ணொளி காப்போம் திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

அம்மா ஆரோக்கிய திட்டம்:

ஏழை மக்களுக்கு விரைவில் நோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முழு சிகிச்சையளிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் வாரத்தில் இரண்டு நாட்கள் செயல்படுத்தப்படுகின்றது. இதில் 25 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றது.

புதுயுகம்:

வளர் இளம் பெண்களுக்கு மாதவிடாய் துாய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2 மாதத்திற்கு 2 கட்டு சானிட்டரி நாப்கின்கள் அனைத்து வளர் இளம் பெண்களுக்கும் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிலும் 6 சானிட்டரி நாப்கின் உள்ளடங்கியுள்ளது.

நடமாடும் மருத்துவமனை திட்டம்:

நடமாடும் மருத்துவக்குழு ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் 40 முகாம்கள் நடத்திவருகின்றன. நடமாடும் மருத்துவக்குழு கிராமங்களில் தடுப்புசி திட்டத்தினை (குறிப்பாக விடுபட்ட குழந்தைகளுக்கு) கண்காணித்து வருகிறது. மேலும் கர்ப்பகால கவனிப்பு, பேறுகாலத்திற்கு பின் கவனிப்பு, குடும்ப நல திட்டங்கள், ஆய்வக சேவைகள், வளர் இளம் வயதினருக்கான வேவை, பரிந்துரை மற்றும் கலந்தாய்வு பணிகளை செய்து வருகின்றது.

பல் பாதுகாப்பு:

வாய் சுத்தம் சுகாதாரமான வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும். பல் பாதுகாப்பு இதற்கு முக்கிய பங்களிக்கின்றது. இது இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை எதிர்பார்ப்பு மற்றும் தேவையாகும்.

ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம்

தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளும் நோக்கமாக கொண்டது. நோய் கண்காணிப்பு அனைத்து மருத்துவமனைகளிலிருந்தும் தகவல்களை சேகரித்து அதனை ஒவ்வொரு வாரமும் இணையதள பதிவு செய்யப்படுகின்றது. இப்பதிவுகள் தேசிய மற்றும் மாநில கண்காணிப்பு மையங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தகவல்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வாராந்திர ஆய்வு, முன்கூட்டி கண்டறிதல், தினசரி அறிக்கை, திடீர் நோய் தாக்கம், மனிதவளம், ஆய்வகங்களை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய பணிகளாகும்.

ராஷ்ட்ரிய பால் சுவஸ்த்திய காரியக்கிராம்

குழந்தைகளின் சுகாதார மேம்பாட்டிற்காக தேசிய ஊரக நலவாழ்வு சங்கத்தின் கீழ் இத்திட்டம் இயங்கிவருகின்றது. பிறவி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, நோய் மற்றும் வளர்ச்சி குறைபாடு ஆகிய குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை விரைவில் கண்டறியப்படுகிறது.

பள்ளி குழந்தைகள் நலவாழ்வு திட்டம், பள்ளி பல் பாதுகாப்பு திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம், பிறவி குறைபாடுகள் கண்டறியும் திட்டம் உட்பட தமிழ்நாடு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுத்தி வந்த திட்டங்களை ஒருங்கினைத்து இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆண் / பெண் மருத்துவர், மருந்தாளுநர், ஒரு செவிலியர் ஆகியவர்கள் உள்ளனர். இதில் குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளை பரிசோதிக்க மாவட்ட விரைவில் நோய் கண்டறியும் மையம் (DEIC) மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றது.