அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பசுமை முதன்மையாளர் விருதுகள் 2024-2025 | தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) 15.04.2025 அன்று விருதுகளை வழங்க முன்மொழிந்தது. 2024 முதல் 2024 வரையிலான ஆண்டுக்கான பசுமை முதன்மையாளர் விருதுகள் 2024-2025 நிதியாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய அமைப்பு/கல்வி நிறுவனங்கள்/ பள்ளிகள்/கல்லூரிகள்/குடியிருப்பு நலச் சங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்பு / தொழில்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது. விருது பெற்றவர்களுக்கு ஆண்டுதோறும் 2 தனிநபர்கள்/ நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். |
10/03/2025 | 15/04/2025 | பார்க்க (824 KB) |
மஞ்சப்பை விருது 2024 – 2025 | “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 2022-2023 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ் விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும். |
10/03/2025 | 01/05/2025 | பார்க்க (2 MB) Annexure II_Application Formats Application Format Manjappai Award 2024 (1 MB) |