மூடு

முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்

வழிகாட்டுதல்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அல்லது முனைவர் ஏபிஜே அப்துல் கலாம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இந்தியத்திருநாட்டின் 11 வது குடியரசுத்தலைவராக விளங்கிய இவர் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். பின்னாளில், விஞ்ஞானியான இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஷில்லாங்கில் ூலை மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட அன்னாரது திடீர் மறைவுக்குப்பிறகு 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி பேய்க்கரும்பில் நல்லடக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில், அன்னாரது நினைவாக ஒரு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது . மணி மண்டபத்தின் உள்ளே அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும சில ் ஏவுகணைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

புகைப்பட தொகுப்பு

  • முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்
  • முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம் படம் 1
  • முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம் படம் 2

அடைவது எப்படி:

வான் வழியாக

இராமேஸ்வரம் நகரிலிருந்து 175 கி.மீ தூரத்தில் மதுரை விமான நிலையம் உள்ளது. தூத்துக்குடி, ராமேஸ்வரம் நகரிலிருந்து 195 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு விமான நிலையம் ஆகும்.

தொடர்வண்டி வழியாக

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து சுமார் 1.3 கி.மீ. தொலைவில் இரயில் நிலையம் உள்ளது.

சாலை வழியாக

இராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பஸ் ஸ்டாண்ட் உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நீங்கள் தனுஷ்கோடிக்கு பொது / தனியார் போக்குவரத்துகளை கிடைக்கும்.