மூடு

ஆவின்

சிவகங்கை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம்

 • காரைக்குடி பால்பண்ணை 1983 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 • ஒன்றியம் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை விவகார எல்லையாக கொண்டு சுமார் 332 சங்கங்களிலிருந்து 12,318 பால் உற்பத்தியாளர்கள் மூலம் தற்போது நாளொன்றுக்கு 66,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
 • ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால்பண்ணை ஒன்றும் சிவகங்கையில் நாளொன்றுக்கு தலா 10 / ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட பால் சேகரிப்பு நிலையம் மற்றும் நாளொன்றுக்கு 52,000 லிட்டர் திறன் கொண்ட 12 தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
 • ஒன்றிய பால் சேகரிப்பு பணியில் 32 எண்ணிக்கை பால் சேகரிப்பு ஒப்பந்த வழித்தட வாகனங்கள் செயல்படுகிறது.
 • ஒன்றியம் தற்போது நாளொன்றுக்கு 37,000 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது, உபரிப்பால் 24,000 லிட்டர் இணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
 • ஒன்றியம் தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.24.0 இலட்சம் மதிப்பீட்டுத்தொகை பால் பொருட்கள் மற்றும் உபபொருட்கள் விற்பனை செய்து வருகிறது.
 • ஒன்றியத்தில் தற்போது பால் விற்பனைக்காக 13 எண்ணிக்கை பால் விநியோக ஒப்பந்த வழித்தடம் செயல்பட்டு வருகிறது.
 • ஒன்றியத்தில் தற்போது 1 அதிநிவீன பாலகங்கள் செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் 3 நவீன பாலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 • கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் மொத்தம் 4 ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 • ஒன்றிய விவகார எல்லையிலுள்ள 20 எண்ணிக்கை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 • தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கடந்த 7 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் இல்லத்திற்கே சென்று கால்நடை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் 10 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் வருடந்தோறும் 1,500 கறவைமாடுகளுக்கு மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டு வசதி செய்யப்பட்டு வருகிறது.
 • ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி கால்நடை தீவனத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 2/- வீதம் மானியமாக வழங்கி வருகிறது. அதே போல் தாது உப்பு கலவை கிலோ ஒன்றுக்கு ரூ. 20/- வீதம் மானியமாக வழங்கி வருகிறது.
 • ஒன்றியத்தில் கொள்திறனை மேம்படுத்தவும், விரிவாக்கவும் பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.155.10 இலட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள், புதிய கட்டிடங்கள், இயந்திரங்கள், நவீன பாலகங்கள் நிறுவப்பட்டுள்ளது.
 • ஒன்றியம் தற்போது இலாபகரமாக செயல்பட்டு வருகிறது.
 • ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால்பண பட்டுவாடா 10 தினங்களுக்கு ஒருமுறை நிலுவையில்லாமல் வழங்கி வருகிறது.
 • ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட்ட மனித திறன் 132 எண்ணிக்கையில் 92 எண்ணிக்கை பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.
 • பணியாளர்கள் நலன் கருதி டிசம்பர் 2016 முதல் 66 பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 1,91,215/- வழங்கப்படுகிறது.
 • ஒன்றியத்திலிருந்து ஓய்வு பெற்ற 66 பணியாளர்களுக்கு அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டு உத்தேச திட்டங்கள் குறித்து (விபரம்)

 • நபார்டு திட்டம் 2017-2018ன் கீழ் ரூ. 461.50 இலட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலும் ரூ. 100.0 இலட்சங்கள் மதிப்பீட்டில் 3 நவீன பாலகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்புக்கு:

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ,
ஆவின் , ஓ சிறுவயல் ரோடு , கழனிவாசல் ,
காரைக்குடி-2
தொலைபேசி : 04565255701/255702
தொலைநகல் :04565 -255700
மின்னஞ்சல் : aaavinsgi[at]gmail[dot]com/aavin14kkd[at]gmail[dot]com