மூடு

நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை

நிலஅளவைத் துறையின் மாவட்ட அதிகாரியாக உதவி இயக்குநர் உள்ளார். உதவி இயக்குநரின் கீழ் இரண்டு ஆய்வாளர்களும், ஆய்வாளர்களின் கீழ் எட்டு வட்டங்களிலும் வட்டத் துணை ஆய்வாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 400 வருவாய் கிராமங்கள் உள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிலஅளவை பிரிவு வட்டத் துணை ஆய்வாளரின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. அங்கு கீழ்க்கண்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பட்டா மாறுதல் :

பொது மக்களால் கிரையம் வாங்கப்படும் நிலங்களில் முழுமையாக வாங்கப்படும் நிலத்திற்கு மண்டல துணை வட்டாட்சியராலும், பகுதியாக வாங்கப்படும் நிலங்களில் உட்பிரிவு செய்யப்பட்டு வட்டாட்சியரால் பட்டா வழங்கப்படுகிறது.

புல எல்லை அளவு செய்தல் :

பட்டாதாரர் இருவருக்கும் இடையே எல்லை தொடர்பான தாவா ஏற்படும் பொழுது அல்லது பட்டாதாரரால் தனது எல்கையினை தெரிந்து கொள்ளும்பொருட்டு மனு செய்யும்பொழுது புல எல்லை அளந்து காண்பிக்கப்படுகிறது.

ஆக்கிரமிப்பு அகற்றுதல் :

ஊராட்சி, நகராட்சி மற்றும் அரசுத் துறைகளுக்கு சொந்தமான அல்லது புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படும்பொழுது புல எல்லைகள் அளவு செய்து ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறுகிறது.

நில ஒப்படைப்பு / வீட்டு மனை ஒப்படைப்பு

நிலமற்ற மற்றும் வீட்டு மனை இல்லாத ஏழை விவசாயிகளுக்கு தரிசு மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் அரசால் நில ஒப்படை செய்யும் பொழுது அது சம்பந்தமாக பட்டா வழங்கும் பொருட்டு நிலஅளவை உட்பிரிவு பணிகள் செய்யப்படுகிறது.

நில எடுப்பு :

அரசுக்கு மொத்தமாக நிலம் தேவைப்படும் பட்சத்தில் நில எடுப்பு சட்டத்தின்படி ரயத்துகளிடமிருந்து நிலத்தினை அரசுக்கு பெற தேவையான அளவுப் பணிகள் நிலஅளவை சட்டப்படி மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு:

உதவி இயக்குநர்,
மாவட்ட நிலஅளவை அலுவலகம்,
மாவட்டஆட்சியர்அலுவலகம்,
இராமநாதபுரம் மாவட்டம் – 623503.

மின்னஞ்சல் முகவரி :

  • adsurrmd[at]nic[dot]in
  • adsurrmd[at]gmail[dot]com