மூடு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதைத் தொடர்ந்து படைக்கலைப்பினால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட போர் வீரர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கத்தோடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் சேவைகள் 1948- ஆம் ஆண்டிலிருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1954 – இல் சிவராவ் குழு அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய தொழில் ஆராய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை நிலவரத் தகவல் ஆகிய பணிகள் வேலைவாய்ப்புத் துறையால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இதனைத்தொடர்ந்து, 30.07.2019–இல் வெளியிட்ட அரசாணையின்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்யப்பட்டன.

செயல்பாடுகள்

  • பதிவு செய்தல் மற்றும் பதிவைப் புதுப்பித்தல்.
  • பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு பதிவுதாரர்களை பரிந்துரை செய்தல்.
  • வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல்
  • தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக போட்டிதேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
  • கல்வி நிறுவனங்களில் தொழில் நெறி வழிகாட்டல் சொற்பொழிவுகள் நிகழ்த்துதல்.
  • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல்.
  • வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தைச் செயல்படுத்துதல்
  • வேலை நிலவரத் தகவல்களைச் சேகரித்துத் தொகுத்தல்
  • மெய்நிகர் கற்றல் இணையதளம் வாயிலாக போட்டிதேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இணைய வழி பாடக்குறிப்புகள் வழங்குதல்
  • தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் மூலமாக தனியார் துறைகளில் பணி நியமனம் வழங்குதல்.
  • திறன் பயிற்சி மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆலோசனைகள் வழங்கி பதிவு செய்தல்.
  • தொழில்முனைவு ஆலோசனைகள்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத்திட்டம்

இத்திட்டத்தின் கீழ் உதவி பெற வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும்,தொடர்ந்து பதிவை புதுப்பித்துவரும் இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வ.எண் கல்வித்தகுதி தொகை
01 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-  மாதம் ஒன்றிற்கு
02 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-  மாதம் ஒன்றிற்கு
03 மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/-  மாதம் ஒன்றிற்கு
04 பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600/- மாதம் ஒன்றிற்கு
உதவி பெறுவதற்குரிய தகுதிகள்
  1. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/–க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
  2. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு 45 வயது எனவும், இதர பயனாளிகளுக்கு 40 வயது எனவும் உச்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (பொறியியல், மருத்துவம், கால்நடைமருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்பட்ட படிப்புகள் நீங்கலாக.)
  3. கல்வி நிறுவனங்களில் நேரடியாக கல்வி பயில்பவராக இருத்தல் கூடாது
  4. எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரிபவராக இருத்தல் கூடாது
மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்
    • வருவாய்த்துறை சான்று
    • கல்வித்தகுதிச் சான்று நகல்கள்
    • வேலைவாய்ப்பு அட்டை நகல்
    • வங்கிக்கணக்கு விபரங்கள்

இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்திலோ இலவசமாக பெற்று பயனாளிகள் பயனடையலாம்

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைத் திட்டம்.

இத்திட்டத்தின் கிழ் உதவி பெற வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வ.எண் கல்வித்தகுதி தொகை
01 பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600/-  மாதம் ஒன்றிற்கு
02 மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-  மாதம் ஒன்றிற்கு
03 பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.1000/-  மாதம் ஒன்றிற்கு
உதவி பெறுவதற்குரிய தகுதிகள்
  1. வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
  2. உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. (பொறியியல், மருத்துவம், கால்நடைமருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்பட்ட படிப்புகள் நீங்கலாக.)
  3. கல்வி நிறுவனங்களில் நேரடியாக கல்வி பயில்பவராக இருத்தல் கூடாது.
  4. எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரிபவராக இருத்தல் கூடாது.
மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்
  • மருத்துவக் குழுவினரால் வழங்கப்பட்ட தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை
  • கல்வித்தகுதிச் சான்று நகல்கள்.
  • வேலைவாய்ப்பு அட்டை நகல்.
  • வங்கிக்கணக்கு விபரங்கள்.
  • சுயஉறுதிமொழி

இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்திலோ இலவசமாக பெற்று பயனாளிகள் பயனடையலாம்.

தன்னார்வ பயிலும் வட்டம்

  • அரசு வேலை வாய்ப்பிற்கான போட்டி தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மற்றும் அரசு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
  • தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தோ்வுகளுக்கான 3000க்கும் மேற்பட்ட பொது அறிவுப் புத்தகங்கள் வாராந்திர, மாதாந்திர நாளிதழ்கள் மற்றும் தினசரி அனைத்து செய்தித்தாள்கள் பயன்பாட்டிற்கு உள்ளன.
  • போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சிகள் குறிப்பாக தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம், பணியாளர் தேர்வு குழுமம் சீருடைப்பணியாளா், வங்கி, இரயில்வே துறை, வனத்துறை, ஆசிரியா் தோ்வு வாரியம் போன்ற தோ்வுகளுக்கு சிறந்த வல்லுநா்களை கொண்டு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், மாதிரி தோ்வுகள் மற்றும் மாதிரி நோ்காணல் போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மையம்,
”டி” பிளாக்
மாவட்ட ஆட்சியர் அலுவலக அஞ்சல்
இராமநாதபுரம் – 623 503.
மின்னஞ்சல் – deo[dot]rmd[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் 04567 – 230160