மூடு

பொதுவிநியோகத் திட்டம்

அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பு வழங்குவது, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களுக்கு தரமான விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் மலிவு விலையிலான சிறப்பு அத்தியாவசியப் பொருட்களை (சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில்) அனைத்து மாதங்களும் நியாயவிலைக்கடைகளின் வாயிலாக எளிய வழியில் கிடைக்க செய்வதே பொது விநியோகத்திட்டத்தின் நோக்கமாகும்.

பொது விநியோகத் திட்டத்தின் நோக்கங்கள்

  • குடும்பஅட்டைதாரர்கள் நியாயவிலைக்கடைகளை எளிதாக அணுகுவதை உறுதி செய்தல்
  • ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்தல்.
  • அத்தியாவசியப் பொருட்களின் பொது விலை உயர்வின் விளைவுகளிலிருந்து பொதுமக்களை பாதுகாத்தல், குறிப்பாக விலைவாசி உயர்வினை தாங்க இயலாத ஏழை மக்களைப் பாதுகாத்தல்.

துறையின் செயல்பாடுகள்

    • அத்தியாவசியப் பொருட்களை சரியான நேரத் திட்டமிடலுடன் நகர்வு வழித்தடப் பட்டியலை பயன்படுத்தி கட்டுப்பாட்டுடன் நகர்வு செய்தல்.
    • உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், தனி வட்டாட்சியர்( பறக்கும்படை),வட்ட வழங்கல் அலுவலர்கள், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, மற்றும் இதரக் கட்டமைப்பைப் பயன்படுத்தி தடுத்தல்.
    • E-POS அமைப்பு, பயோமெட்ரிக் (விரல் ரேகை பதிவு முறை) அங்கீகரிக்கப்பட்ட விநியோகம் e-Governance மூலமாக அத்தியாவசியப் பொருட்களை திட்டமிட்டு ஒதுக்கீடு நகர்வு மற்றும் விநியோகம் செய்தல்.

பொது விநியோகத்திட்ட அலுவலர்கள் மற்றும் பொறுப்புகள்

      1. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்- தனி வட்டாட்சியர் குடிமைப் பொருள் வழங்கல்), வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் பறக்கும்படை ஆகியோரைப் பயன்படுத்தி பொது விநியோகத்திட்டச் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக கண்காணித்தல்.
      2. மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்- தரமான அத்தியாவசியப் பொருட்களை உரிய நேரத்தில் கொள்முதல் செய்தல் மற்றும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்தல்.
      3. இணை பதிவாளர் (கூட்டுறவு) – கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நியாயவிலைக்கடைகளை நிர்வாகம் செய்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலமாக விநியோகம் செய்தல் .
      4. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு- அத்தியாவசியப் பொருட்களின் கடத்தல் மற்றும் குடிமைப் பொருட்களை தத்தமது நுகர்வுக்கு பயன்படுத்தாது அதனை வெளி நபர்கள் அல்லது ஏஜென்ஸிக்கு கூடுதல் விலைக்கு விற்பதைக் கண்டறிந்து அதில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்- 1955 பிரிவு 6அ-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

நியாயவிலைக்கடைகள்

நமது மாவட்டத்தில் கீழ்கண்டவாறு 778 நியாயவிலைக்கடைகள் இயங்கி வருகின்றன.

வ.எண். நியாயவிலைக்கடை இயக்கும் அமைப்பு பகுதிநேரம் முழு நேரம் மொத்தம்
1 தமிழ்நாடு நுகர்பொருள்  வாணிபக்கழகம் 0 19 19
2 கூட்டுறவு 218 522 740
3 இதர கூட்டுறவு (பனை வெல்ல கூட்டுறவு) 1 6 7
4 மகளிர் கடைகள் 0 12 12
மொத்தம் 219 559 778

குடும்ப அட்டை வகைகள்

வ. எண். அட்டை வகை அத்தியாவசியப் பொருட்களிள் உரிமம்
1. PHH அரிசி (1 நபருக்கு 5 கிலோ வீதம்), கோதுமை, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் (0 மற்றும் 1 சிலிண்டர் அட்டைதாரர்களுக்கு)
2. PHH-AAY அரிசி (35kg), கோதுமை, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் (0 மற்றும் 1 சிலிண்டர் அட்டைதாரர்களுக்கு)
3. NPHH அரிசி (ஒரு நபர் அட்டைக்கு 12 கிலோ கூடுதல் நபர் பெரியவர்களுக்கு 4 கிலோ, சிறியவர்களுக்கு 2 கிலோ அதிகபட்சம் 20 கிலோ), கோதுமை, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் (0 மற்றும் 1 சிலிண்டர் அட்டைதாரர்களுக்கு)
4. NPHH-S(சர்க்கரை அட்டை) அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்கள்
5. NPHH-NC பண்டகமில்லா அட்டை
  • NPHH- முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள்
  • PHH- முன்னுரிமை குடும்ப அட்டைகள்
  • AAY- முன்னுரிமை – அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள்

குறிப்பு: நமது மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் டிசம்பர்-2022 முதல் PHH மற்றும் PHH-AAY அட்டைகளுக்கு செறிவுட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

நவம்பர்-2022 நிலையில் குடும்ப அட்டைகளின் விவரம்
மொத்த அட்டைகள் – 3,98,665,
NPHH- அட்டைகள் -1,57,862
PHH- அட்டைகள் -2,00,167
PHH-AAY அட்டைகள் – 40,436

பொது மக்களுக்கான துறைத்திட்டங்கள்

    1. புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்குதல்
    2. குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் வழங்குதல் (குடும்ப உறுப்பினர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம் மற்றும் அட்டையில் திருத்தங்கள்)
    3. நகல் மின்னணு அட்டை வழங்குதல் – (தொலைந்து போன மற்றும் திருத்தம் செய்யப்பட்ட அட்டைகள் மட்டும்)
எவ்வாறு விண்ணப்பித்தல்

பொது இசேவை மையம் அல்லது www.tnpds.gov.in இணையதளத்தில் ஆன்லைனில் தனியாகவும் விண்ணப்பிக்கலாம்.

சேவை தகுதிகள்
புதிய மின்னணு குடும்ப அட்டை
  • தனி சமையலறை கொண்ட தனி குடும்பமாக இருக்க வேண்டும்.
  • இருப்பிடத்திற்கான சான்று ஆவணம்
  • அடையாளச்சான்று ஆவணம்
  • சமையல் எரிவாயு இணைப்பு ஆவணம்
குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் சேவை தொடர்பான உரிய ஆவணங்கள் (பிறப்பு சான்றிதழ் அடையாளச்சான்று, இறப்பு சான்றிதழ், முகவரி  சான்று)
நகல் மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போன மற்றும் திருத்தம் செய்யப்பட்ட அட்டைகளுக்கு நகல் மின்னனு அட்டைகள் அச்சிட்டு வழங்கப்படும். மேலும் திருத்தப்பட்ட நகல் மின்னணு அட்டை தேவைப்படின் அவ்வட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அட்டை பிரிண்டிங் கட்டணம் ரூ.20/- னை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ தனி வட்டாட்சியர் வசம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்

குறைதீர்க்கும் விவரங்கள்

குடியிருப்பாளார்கள், குறைகளை இணையதளம் வாயிலாக அல்லது மின்னஞ்சல் முறை மூலம் தீர்க்கலாம். பொது விநியோகத்திட்டத்தின் கட்டணமில்லா உதவித் தொலைபேசி எண்.1967 மற்றும் 1800-425-5901 எண்கள் மூலம் சந்தேகங்கள், புகார்கள், ஆலோசனைகள் பெறலாம். குறுஞ்செய்தி மூலம் புகார் (PDS 107 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு பதிவு செய்யப்பட்ட அலை பேசியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புதல்) அளித்து தீர்வு காணலாம். மேலும் www.tnpds.gov.in என்ற பொது இணையதளம் மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.

சமூக தணிக்கை

பொது விநியோகத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் உரிமை அளவுகள் ஆகியவற்றினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ” சமூக தணிக்கை” நடத்த தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகள் -2017-ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வருடந்தோறும் குடியரசு, சுதந்திரதினம், அக்டோபர்-2 (காந்தி ஜெயந்தி) மற்றும் தமிழக அரசால் ஆணையிடப்படும் பிற முக்கிய நாட்களிலும் சமூக தணிக்கை நடத்தப்படும். அத்தினத்தில் நியாயவிலைக்கடையின் அனைத்து ஆவணங்களும் கிராம சபையின் முன்பாக தணிக்கைக்காக தாக்கல் செய்யப்படும். கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்படும் புகார்கள் உரிய நடவடிக்கைக்காக மாவட்ட குறை தீர் அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு தீர்வு விபரம் ஒருவார காலத்திற்குள் கிராம சபைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை பயனாளிகள் பட்டியல் கிராம சபையின் முன் சமரப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. இதன் மூலம் பொது விநியோகத்திட்டத்தின் பயன்கள் உரியவர்களுக்கு சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.

துறையின் தொடர்பு விவரங்கள்

மாவட்டம்/

வட்டம்

அலுவலகம் தொலைபேசி எண் அலைபேசி எண். மின்னஞ்சல்
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராமநாதபுரம் 04567-230610 9445000926 dro[dot]tnrmd[at]nic[dot]in
இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராமநாதபுரம். 04567-230506 9445000362 dso[dot]rmd[at]tn[dot]gov[dot]in
இராமநாதபுரம் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலவலகம், இராமநாதபுரம் 9445000363 tsormd[dot]ramnad[at]tn[dot]gov[dot]in
இராமேஸ்வரம் வட்ட வழங்கல் அலவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், இராமேஸ்வரம். 9445000364 tsormd[dot]rameshwaram[at]tn[dot]gov[dot]in
திருவாடானை வட்ட வழங்கல் அலவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், திருவாடானை. 9445000365 tsormd[dot]thiruvadanai[at]tn[dot]gov[dot]in
பரமக்குடி வட்ட வழங்கல் அலவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், பரமக்குடி. 9445000366 tsormd[dot]paramakudi[at]tn[dot]gov[dot]in
முதுகுளத்துார் வட்ட வழங்கல் அலவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், முதுகுளத்துார். 9445000367 tsormd[dot]mudukulathur[at]tn[dot]gov[dot]in
கடலாடி வட்ட வழங்கல் அலவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், கடலாடி 9445000368 tsormd[dot]kadaladi[at]tn[dot]gov[dot]in
கமுதி வட்ட வழங்கல் அலவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், கமுதி. 9445000369 tsormd[dot]kamuthi[at]tn[dot]gov[dot]in
கீழக்கரை வட்ட வழங்கல் அலவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், கீழக்கரை. 9499937032 tsormd[dot]kilakarai[at]tn[dot]gov[dot]in
ஆர்.எஸ்.மங்கலம் வட்ட வழங்கல் அலவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், ஆர்.எஸ்.மங்கலம். 04561-241454 tsorsmangalam[dot]rmd[at]tn[dot]gov[dot]in
  தனி வட்டாட்சியர், பறக்கும் படை   9445045628