வேளாண்மைத் துறை
வேளாண் கால நிலை மண்டலம்
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கே பாக் ஜலசந்தி ,தென் மேற்க்கே விருதுநகர் மாவட்டம் , வட கிழக்கில் சிவகங்கை மாவட்டம், வடக்கே புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தெற்க்கே மன்னார் வளைகுடா ஆகியவற்றை எல்லையாக கொண்டு “ தெற்கு மண்டலத்தில்“ 9.05° ‘ to 9.50° ’ வட அட்சரேகை மற்றும் 78.10° ‘ to 79.27° ‘ கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது.
வெப்பநிலை விவரம்
சராசரி அதிக பட்ச வெப்பநிலை 29.2° முதல் 37.8° செல்சியஸ் ஆகும். சராசரி குறைந்த பட்ச வெப்பநிலை 19.5° முதல் 24.8° செல்சியஸ் ஆகும். மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை வேறுபாடு மிகவும் குறைவானதாகவே காணப்படும்.
ஈரப்பதம்.
பொதுவாக காற்றின் ஈரப்பதம் 75% முதல் 79% வரை காணப்படும். உயர்ந்த பட்ச காற்றின் ஈரப்பதம் 85% நவம்பர் மாதத்திலும், குறைந்த பட்ச ஈரப்பதம் 75% மே மாதத்திலும் காணப்படும்.
காற்றின் அளவு
அக்டோபர், நவம்பர் மாதங்களில் காற்றின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். அக்டோபர் முதல் மார்ச் வரை காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையிலும் , மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்று தென் மேற்கு மற்றும் மேற்கு திசையிலும் வீசும்.
மழை அளவு மற்றும் பரவல்
இம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையே மிகவும் பிரதான மழை பருவமாகும் . ஆண்டு சராசரி மழையளவு 827.0 மி மீ ஆகும்.சராசரி குளிர் கால மழையளவு 67.4 மி மீ ஆகும்; சராசரி கோடை கால மழையளவு 122.7 மி மீ ஆகும்; சராசரி தென் மேற்கு பருவ மழையளவு 135.3 மி மீ ஆகும் ; சராசரி வட கிழக்கு பருவ மழையளவு 501.6 மி மீ ஆகும்.
மண் வளம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் களி, மணல் ,செம்மண் மற்றும் கருப்பு பருத்தி மண் வகைகள் காணப்படுகின்றன.இராமநாதபுரம் ,திருப்புல்லாணி, மண்டபம் ,திருவாடனை, ஆர் எஸ் மங்கலம் கடலடி வட்டார பகுதிகளில் மணல் பாங்கான மண் வகைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.மேலும் கடற்கரையோர அப்பகுதிகளில் அதிக அளவில் களர் மற்றும் உவர் மண் வகைகள் காணப்படுகின்றன.இருப்பினும் இராமேஸ்வரம் தீவு பகுதியில் மணல் பாங்கான மண் அதிக அளவில் காணப்படுகிறது.
பொதுவாகவே இம் மாவட்ட மண் வகைகள் நைட்ரஜன் சத்து குறைவானதாகவே காணப்படுகின்றன. மேலும் திருப்புல்லாணி, கமுதி மற்றும் கடலாடி வட்டாரங்களில் நடுத்தரத்திலும் இதர வட்டாரங்களில் குறைவாகவும் மண் வகைளில் பாஸ்பரஸ் சத்து காணப்படுகிறது.
இம் மாவட்ட மண்ணில் ஜிப்சம் , சுண்ணாம்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன. முதுகுளத்தூர் மற்றும் கீழக்கரை வட்டாரங்களில் ஜிப்சம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியில் சுண்ணாம்பு தாதுவும் குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது.
பயிர் சாகுபடி முறை
2016-17 ‘ஜி’ அறிக்கையின் படி இம் மாவட்ட சாகுபடி பரப்பு 1,72,469 எக்டர் ஆகும். மானாவாரி சாகுபடி முறையில் மட்டுமே பெரும்பாலும் விவசாயம் நடைபெறும் இம் மாவட்டத்தில் 63800 எக்டர் பரப்பு பாசனம் பெறுவதாகவும்,137099 எக்டர் பாசனம் பெறாத பரப்பாகவும் காணப்படுகிறது. நெல், சோளம், கம்பு, இராகி,உளுந்து ,பருத்தி , மற்றும் தென்னை இம் மாவட்டத்தின் பிரதான பயிர்கள் ஆகும்.
நெல்
இம் மாவட்டத்தின் மிக முக்கிய உணவு பயிரான நெல் 73% பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி பயிராகவும் மிக சிறிய அளவில் இறவை பயிராகவும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் மானாவாரி சாகுபடி ஆகஸ்ட் மாதம் துவங்கி அக்டோபர் வரை நடைபெறும். பருவ மழை துவங்கும் முன்பு நீண்ட கால மற்றும் மத்திய கால இரகங்கள் விதைக்கப்படுகின்றன.பருவமழை தாமதமானால் மத்திய மற்றும் குறுகிய கால இரகங்கள் விதைப்பு செய்யப்படும். 105 முதல் 135 நாட்கள் வரை உள்ள உள்ளூர் மற்றும் உயர் விளைச்சல் இர கங்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.கண்மாய் பாசன பகுதிகளில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இறவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சில நிகழ்வுகளில் வைகை அணையிலிருந்து பாசன நீர் திறப்பை பொறுத்தும் கண்மாய்களில் பாசன நீர் நிரப்பப் படுவதை தொடர்ந்தும் சாகுபடி டிசம்பர் வரை நீளும் வாய்ப்பும் உள்ளது.
சோளம்
மானாவாரி பயிரான சோளம் இங்கு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை சாகுபடி செய்யப்படுகிறது. சில இடங்களில் பயறு வகை பயிர்கள் இதில் ஊடு பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
கம்பு
மானாவாரி கம்பு சாகுபடி செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடை பெறுகிறது. இராமநாதபுரம் வட்டத்தில் மட்டும் டிசம்பர் வரை கம்பு சாகுபடி செய்யப்படுகிறது.
இராகி
செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை இராகி பயிர் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது.
சிறு தானியங்கள்
பொதுவாக மாவட்டம் முழுவதும் மானாவாரி பயிராக சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குதிரைவாலி பயிர் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
பருத்தி
பருத்தி பயிர் இராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நவம்பர் , டிசம்பர் மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.பரமக்குடி மற்றும் கமுதி வட்டாரங்களில் நெல் பயிரை தொடர்ந்து பருத்தி பயிர் ஜனவரி பெப்ரவரி மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
பயறு வகை பயிர்கள்
உளுந்து, பாசி பயறு மற்றும் தட்டை பயறு போன்ற பயறு வகை பயிர்கள் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. துவரை பயறு மிக குறைந்த அளவில் தனிப்பயிராகவும் சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை பயிர்களில் ஊடு பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. உளுந்து, தட்டை பயறு மற்றும் பாசி பயறு தனிப்பயிராகவும் பருத்தி , நிலக்கடலை பயிர்களில் ஊடு பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.
நிலக்கடலை மற்றும் எள்
டிசம்பர் ஜனவரி மாதங்களில் நிலக்கடலை மற்றும் எள் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
மிளகாய்
தோட்டக்கலை பயிர்களில் மிளகாய் பயிர் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.செப்டம்பர் மாதத்தில் நேரடி விதைப்பு மூலமும், நவம்பர் மாதத்தில் நடவு மூலமும் மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது .
பாசனப்பகுதி | ஹெக்டரில் |
---|---|
மொத்த சாகுபடி பரப்பு | 172469 |
இறவை பரப்பு | 63800 |
மானாவாரி பரப்பு | 108668 |
பாசன ஆதாரம் | எண்களில். |
---|---|
கால்வாய் | இல்லை |
கண்மாய் | 1694 |
குழாய் கிணறு | 425 |
கிணறு | 7321 |
தொழிலாளர்கள் வகை | எண்களில். |
---|---|
சாகுபடியாளர்கள் | 173767 |
வேளாண் தொழிலாளர் | 153874 |
வரிசை எண் | வட்டாரம் | ஜமீன்(சிபாக*) | ஊராட்சி(சிபாக*) | வைகை வடிநிலம்(பொக#) | குண்டாறு வடிநிலம்(பொக#) | மணிமுத்தார் வடிநிலம்(பொக#) | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|
1 | இராமநாதபுரம் | 5 | 42 | 34 | – | – | 81 |
2 | திருபுல்லாணி | 5 | 52 | 22 | – | – | 79 |
3 | மண்டபம் | – | – | 1 | – | – | 1 |
4 | பரமக்குடி | 77 | 12 | 49 | – | – | 138 |
5 | போகலூர் | 49 | 5 | 33 | – | – | 87 |
6 | நயினார்கோவில் | 47 | 7 | 45 | – | – | 99 |
7 | திருவாடனை | 83 | 115 | 62 | – | 27 | 287 |
8 | ராஜசிங்கமங்களம் | 68 | 106 | 77 | – | – | 251 |
9 | கமுதி | 45 | 169 | 0 | 38 | – | 252 |
10 | முதுகுளத்தூர் | 38 | 104 | 12 | 28 | – | 182 |
11 | கடலாடி | 20 | 143 | – | 74 | – | 237 |
மொத்தம் | 437 | 755 | 335 | 140 | 27 | 1694 |
* – சிறு பாசன கண்மாய், # – பொதுபணித்துறை கண்மாய்
வரிசை எண் | வட்டாரம் | பொதுபணித்துறை கண்மாய் | ஊராட்சி ஒன்றிய கண்மாய் | முன்னாள் ஜமீன் கண்மாய் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | இராமநாதபுரம் | 5180.8 | 660 | 102.4 | 5943.2 |
2 | திருபுல்லாணி | 2478.4 | 784.8 | 64.8 | 3328 |
3 | மண்டபம் | 38 | – | – | 38 |
4 | பரமக்குடி | 5819.6 | 276.4 | 1312.8 | 7408.8 |
5 | போகலூர் | 3000.4 | 66.8 | 632 | 3699.2 |
6 | நயினார்கோவில் | 4198 | 133.6 | 914.4 | 5246 |
7 | திருவாடனை | 5114.8 | 2049.2 | 968.8 | 8132.8 |
8 | ராஜசிங்கமங்களம் | 10060 | 1944 | 1065.2 | 13069 |
9 | கமுதி | 3676.4 | 2454.4 | 468.8> | 6599.6 |
10 | முதுகுளத்தூர் | 3740.4 | 1773.2 | 53240 | 6046 |
11 | கடலாடி | 7025.6 | 2352 | 235.6 | 9613.2 |
மொத்தம் | 50332 | 12494 | 6297 | 69124 |
வரிசை எண் | பயிர் | இயல்பான பரப்பு – எக்டர் | உற்பத்தி திறன்- கிலோ எக்டர் | உற்பத்தி மெ.டன் |
---|---|---|---|---|
1 | நெல் | 121742 | 3621 | 440827 |
2 | சோளம் | 2629 | 1975 | 5192 |
3 | கம்பு | 915 | 3445 | 3152 |
4 | கேழ்வரகு | 369 | 3040 | 1121 |
5 | இதர சிறுதானியம் | 1643 | 1610 | 2645 |
6 | மொத்தம் சிறுதானியம் | 6271 | 3114 | 19527 |
7 | பயறு | 3517 | 450 | 1853 |
8 | பருத்தி | 1915 | 1.53(பொதி) | 4980 |
9 | நிலக்கடலை | 3533 | 2255 | 7966 |
10 | சூரியகாந்தி பூ | 90 | 1400 | 126 |
11 | எள் | 1301 | 361 | 469 |
12 | மிளகாய் | 19238 | 639 | 12293 |
13 | மல்லி | 1488 | 1618 | 2407 |
14 | தென்னை | 8207 | 9229 | 757 லட்சம் பருப்பு |
15 | கரும்பு | 456 | 107 | 48792 |
16 | மக்காச்சோளம் | 715 | 5500 | 3932 |
மாவட்டம் | யூரியா(டன்) | டிஏபி(டன்) | பொட்டாஷ்(டன்) | காம்ப்ளெக்ஸ்(டன்) | பூச்சிக்கொல்லிகள்- தூசி(டன்) | திரவம்(லிட்டர்) |
---|---|---|---|---|---|---|
இராமநாதபுரம் | 7503 | 2654 | 677 | 2862 | 30.020 | 24262.70 |
நில அளவு | சதவிகிதம் (%) | பரப்பு ஹெக்டரில் |
---|---|---|
<1 ஹெக்டர் | 77.61% | 298841 |
1-2 ஹெக்டர் | 13.98% | 53862 |
2-4 ஹெக்டர் | 5.93% | 22858 |
4-10 ஹெக்டர் | 2.06% | 7941 |
> 10 ஹெக்டர் | 0.39% | 1511 |
மொத்தம் | 100% | 385013 |