மூடு

இராமநாதசுவாமி கோவில்

வழிகாட்டுதல்

இராமநாதசுவாமி கோவில்

இந்துகளின் தெய்வமான ஸ்ரீ ராமனின் பரிசுத்த உறைவிடமான இராமேஸ்வரம் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கம் போன்றது. ஒரு இந்துவுடைய வாழ்க்கை இறை அருளைத்தேடி வாரணாசி (காசி) மற்றும் இராமேஸ்வரம் புனிதப்பயணம் செல்லுதல் மற்றும் புனித காவியமான இராமாயணம் இல்லாமல் முழுமையடையாது. இராமபிரான் 14 ஆண்டுகளை காட்டில் கழித்த பின் இங்கு வந்ததாக நாடோடிக்கதைகளில் சொல்லப்படுகிறது.

இராமனின் சகோதரனான இலக்குவனும் அனுமன் மற்றும் வானர சேனைகளும் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை சென்று இராவணனை இராமன் வென்று வர உதவியதாக புராணம் கூறுகிறது. இவர்கள் பாறைகளால் பாலம் அமைத்து கடலில் அமைந்துள்ள சேது கால்வாயைக்கடந்து இலங்கை சென்று வர உதவினர். இராமபிரான் இங்கு சிவ பெருமானை வணங்கி இந்த இடத்தை புண்ணிய பூமியாக மாற்றியுள்ளதாக நம்பப்படுகிறது. இது சைவம் மற்றும் வைணவம் சங்கமத்தைக்குறிக்கிறது. சைவர்களும் வைணவர்களும் கொண்டாடும் இடமான இங்குள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் முக்கியமானது. எனவேதான் இராமேஸ்வரம், முக்கிய தேசிய புனிதப் பயண மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இராமநாதசுவாமி கோவில் ஒவ்வொரு சுற்றுலாப்பிரியரின் விருப்பமாகும். இக் கோவில் அற்புதமான அமைப்பு, நீண்ட தாழ்வாரங்கள், கலையுணர்வுடன் செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் உயர்ந்த 38 மீட்டர் கோபுரம் கொண்டது.

இக்கோவிலின் கட்டிடப்பணி 12 ஆம் நூற்றாண்டில் சேதுபதி மறவரால் தொடங்கப்பட்டு பிரசித்தி பெற்ற மூன்றாவது பிரகாரமானது அவரது வாரிசுகளால் முடிக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீளமான பிரகாரமும், உலகின் மூன்றாவது பெரியதுமான இது, கிழக்கில் இருந்து மேற்காக 197 மீட்டரும் மற்றும் வடக்கு தெற்காக 133 மீட்டரும் கொண்டது. கி.பி.1897-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இக்கோவிலில் வழிபாடு செய்தார். இந்தியாவிலுள்ள 12 ஜோதி லிங்க வழிபாட்டுத் தலங்களுள் முக்கியமானதாகும். இங்கு சிவபெருமான் ஜோதிலிங்க வடிவில் வழிபடப்படுகிறார்.

புகைப்பட தொகுப்பு

  • இராமநாதசுவாமி கோவில் கோபுரம்
  • இராமநாதசுவாமி கோவில் கிழக்கு கோபுரம்
  • இராமநாதசுவாமி கோவில் யானை

அடைவது எப்படி:

வான் வழியாக

இராமேஸ்வரம் நகரிலிருந்து 175 கி.மீ தூரத்தில் மதுரை விமான நிலையம் உள்ளது. தூத்துக்குடி, ராமேஸ்வரம் நகரிலிருந்து 195 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு விமான நிலையம் ஆகும்.

தொடர்வண்டி வழியாக

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலிலிருந்து சுமார் 1.3 கி.மீ. தொலைவில் இரயில் நிலையம் உள்ளது.

சாலை வழியாக

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பேருந்து நிலையம் உள்ளது.