மூடு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்)

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை 2012-13 முதல் அமலாக்கியுள்ளது. இ;த்திட்டத்தின் செயல்பாடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 60:20 என்ற விகிதத்தில் நிதி செலவு செய்கிறது. ஊரக ஏழை மக்களுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி, நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து, வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்தத்தின் நோக்கமாகும்.. இந்நோக்கத்தினை மையமாகக் கொண்டு, ஏழை எளியவர்கள் அடங்கிய மக்கள் அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலமாக அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்கள், வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள், பொதுவான சேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு இவ்வியக்கம் வழிகாட்டும்.

திட்ட செயல்பாடுகள்

சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல்

தமிழ்நாடு மாநில வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக 4 ஊராட்சி ஒன்றியங்களில் 2012-2013 ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 2 ஊராட்சி ஒன்றியங்களில் 2013-2014ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 8704 மகளி்ர் சுயஉதவிக்குழுக்கள் ஊரகப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை புள்ளி விபரம் சேகரிக்கும் பணியின் மூலம் மேற்படி சுயஉதவிக்குழுக்கள் செயல்படும் விதம் மற்றும் செயல்படாத குழுக்களின் விபரம் தொடா்ந்து கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆதார நிதி

2017-2018ம் ஆண்டிற்கு 250 குழுக்களுக்கு ஆதார நிதி வழங்க இலக்கீடு நிர்ண்யம் செய்யப்பட்டு 250 குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ.3750000/ வழங்கப்பட்டுள்ளது./-

சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு

2013-2014 முதல் 2016-2017 வரை உள்ள ஆண்டிற்கு ரூ.605 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.616.80/- கோடி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று 2017-2018 ஆம் ஆண்டிற்கு ரூ.210.00 கோடி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இது வரை ரூ.189.35 கோடி வங்கிகள் மூலம் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய தொகையை வழங்கிட வங்கிகள் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் (Bulk Loan)

2013-2014 முதல் 2016-2017 வரை உள்ள ஆண்டுகளில் 256 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.123.85 கோடி பெருங்கடன் வழங்கப்பட்டு்ள்ளது.
அதே போன்று 2017-2018 ஆண்டு ஆண்டிற்கு 7 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் வழங்க வேண்டுமென உத்தேசிக்கப்பட்டு, இதுவரை 7 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.5.26 கோடி வங்கிகள் மூலம் பெருங்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

தனிநபா் உதவித்தொகை :

இத்திட்டத்தின் கீழ் 2014-2017 ஆண்டு வரை ரூ.18265000 மட்டும் 1405 மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபா் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் நலிவுற்றோருக்கான உதவித்தொகையாக ரூ.17108000/- மட்டும் 1316 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 31.03.2018க்குள் 100 சதவீத சாதனை நிறைவு பெறும்.

தொழில் முனைவோர் பயிற்சி

இம்மாவட்டத்தில் 2012-2013ம் ஆண்டிற்கு 100 நபா்களுக்கு இப்பயிற்சி வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. (தையல், எம்ப்ராய்டரிங், மீன் ஊறுகாய் தயாரிப்பு, மீன் வலை பின்னுதல், சமையல் உதவியாளா் மற்றும் கருவாடு தயாரித்தல்)

தேசிய நகா்புற வாழ்வாதார இயக்கம்

இத்திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் நகா்புற பகுதிகளில் 118 சுயஉதவிக்குழுக்கள் அமைக்க இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு 118 சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஊக்குநா் மற்றும் பிரதிநிதி பயிற்சி மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி 118 சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

118 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.10000 வீதம் சுழல்நிதியாக 118.00 இலட்சங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

2017-2018ஆம் ஆண்டில் 690 நகா்புற சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கி கடன் இணைப்புத்திட்டத்தின் கீழ் ரூ.2440 இலட்சங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புடன் கூடிய திறன்பயிற்சி
இம்மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கண்டவாறு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

2016-2017 வேலைவாய்ப்புடன் கூடிய திறன்பயிற்சி
வ.எண் நிறுவனம் பெயர் பயிற்சி பயிற்சி பெற்றவர்கள் காலம் குறிப்புகள்
1 அன்னை தெரசா அறக்கட்டளை, இராமநாதபுரம் டெலி கணக்கில் உதவியாளர்கள் 59 72 நாட்கள் நிறைவுற்றது
2 அன்னை தெரசா அறக்கட்டளை,பரமக்குடி டெலி கணக்கில் உதவியாளர்கள் 60 72 நாட்கள் நிறைவுற்றது
மொத்தம் 119
2017-2018 வேலைவாய்ப்புடன் கூடிய திறன்பயிற்சி
வ.எண் நிறுவனம் பெயர் மையத்தின் பெயர் பயிற்சி பயிற்சி பெற்றவர்கள் காலம் குறிப்புகள்
1 ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை, அரியலூர் பரமக்குடி தையல் 29 90 நாட்கள் நடக்கிறது
2 அஜீவிகா திறன் பரமக்குடி தரவு நுழைவு ஆபரேட்டர் 25 72 நாட்கள் நடக்கிறது
3 பி.ஆர்.என் – தநா2014rt3851 இராமநாதபுரம் தரவு நுழைவு ஆபரேட்டர் 46 72 நாட்கள் நடக்கிறது
Total 100

DDU-GKY வேலைவாய்ப்புடன் கூடிய திறன்வளர்ப்புபயிற்சி

2012-2013ம் ஆண்டிற்கு 630 ஊரக பகுதிகளிலுள்ள இளைஞா்களுக்கு இப்பயிற்சி வழங்க இலக்கிடு நிர்ணயம் செய்யப்பட்டு பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

630 இளைஞா்களுக்கு டெலி, ஜேசிபி இயக்குபவர், இலகுரக வாகன ஓட்டுனர், தையல் பயற்சி, செவிலியர் பயற்சி, முன்னணி அலுவலகம் மேலாண்மை ஆகிய பயிற்சிகள் நடத்தி வழங்கப்பட்டது.

2014-2015 ஆம் ஆண்டிற்கு 570 ஊரக பகுதியிலுள்ள இளைஞா்களுக்கு இப்பயிற்சி வழங்க இலக்கீட நிர்ணயம் செய்யப்பட்டு பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.570 இளைஞா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடலோரப்பகுதிகளைச்சார்ந்த 600 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புடன்கூடிய திறன்வளா்ப்பு பயிற்சி வழங்கிட DDU-GKY திட்டத்தின் கீழ் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் பயிற்சி முன்மொழிவு மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை அவா்களுக்கு அனுப்பட்டுள்ளது. முன்மொழிவில் மீனவா் சமுதாயத்தை சார்ந்த இளைஞா்கள் பிற வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக மரைன் பொறி மெக்கானிக், பம்ப் மற்றும் பம்ப் சிஸ்டம் மெக்கானிக் , கப்பல் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மெக்கானிக், மீன்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளின் செயலாக்கம், கான்டினென்டல் குக், டி.டி.பி. மற்றும் அச்சு பப்ளிசிட்டி உதவி, கணினி வன்பொருள் உதவியாளர் ஆகிய பயிற்சிகளுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

வாழ்வாதார பயிற்சி

2016-2017 ஆண்டிற்கு 630 இளைஞா்கள் ஊரக பகுதிலுள்ள மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNERGS) கீழ் உள்ள பணியாளா்களின் குடும்பங்களில் உள்ள இளைஞா்களுக்கு இப்பயிற்சி வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

630 இளைஞா்களுக்கு கணினி வன்பொருள் உதவியாளர், டேலி கணக்கு உதவி. மெக்கானிக் மற்றும் ஓட்டுனர், அழகு சிகிச்சை மற்றும் சிகை அலங்காரம், ஆய்வக உதவியாளர், தையல் பயிற்சி, டி.டி.பி. மற்றும் அச்சு பப்ளிசிட்டி உதவி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது

முத்ரா கடன் மேளா

07.02.2018 அன்று இம்மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முத்ரா கடன் மேளா நடத்தப்பட்டது. அதில் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். தகுதியுடைய சுயஉதவிக்குழ உறுப்பினா்களிடமிருந்து கடன் விண்ணப்பங்கள பெறப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மொத்தமுள்ள 1140 விண்ணப்பங்களில் இதுவரை 1065 விண்ணப்பதாரா்களுக்கு ரூ.335.43 இலட்சங்கள் கடன் வழங்கப்பட்டு 100 சதவீதம் இலக்கு முடிக்கப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகனத்திட்டம் :

அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 1920 வண்டி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 250 இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு ரூ.62,50,000/- மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது 800 இருசக்கர வாகனத்திற்கு மாவட்ட அளவிலான குழு மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு அளித்தபின் மானியம் விடுவிக்கப்படும்.